TRANSGENDER PEOPLE: CORONA RELIEF FUND வழங்கப்படும்: தமிழ்நாடு அரசு..!!
CORONA RELIEF FUND பெற நல வாரியத்தில் பதிவு செய்யாத திருநங்கைகளுக்கும்(TRANSGENDER) CORONA RELIEF FUND வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இந்த செய்தியும் படிங்க...
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய அரசு பரிசீலனை-அரசு ஊழியர்கள் நம்பிக்கை..!!
CORONA இரண்டாம் அலை காரணமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு CORONA நிவாரண உதவியாக ரூபாய் 4-ஆயிரம் வழக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த நிவாரண உதவி நியாய விலை கடைகள் மூலம் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு வழங்கப்பட்டுவருகிறது.
இந்நிலையில் RATION CARD இல்லாத திருநங்கைகளுக்கும் இந்த நிவாரண தொகையை வழங்க உத்தரவிட வேண்டும் என TRANSGENDER கிரேஸ்பானு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி சுப்பையா அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், "திருநங்கைகளில் அடையாள அட்டை இல்லாதவர்களுக்கும் நிவாரண உதவி வழங்கப்படும் என தெரிவித்தார். தமிழ் நாட்டில் மொத்தமுள்ள 11,449 திருநங்கைகளில் RATION CARD வைத்துள்ள 2,956 பேருக்கு இதுவரை நிவாரண உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 8,493 பேருக்கும் நிவாரண உதவித்தொகை வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இதை பதிவு செய்த நீதிபதிகள், CORONA நிவாரண உதவித்தொகை திட்டத்தை தவறாக பயன்படுத்த கூடாது என்பதால், TRANSGENDER என தங்களை அடையாளப்படுத்திக்கொள்வோர் அதற்கான உரிய மருத்துவம் மற்றும் இதர சான்றிதழ்கள் மற்றும் சுயவிவரங்களை அளித்து CORONA நிவாரண உதவியை பெற்றுக்கொள்ளலாம் என உத்தரவிட்டனர்.
இந்த செய்தியும் படிங்க...
SSY(செல்வமகள் சேமிப்பு திட்டம்): கணக்கு தொடங்குவது எப்படி.? என்னென்ன பயன்கள்..??
0 Comments