Join Our Whats app Group Click Below Image

SMART PHONE: அதிகமாக உபயோகிப்பதால்-உடலுக்கு ஏற்படும் ஆபத்துகள்..!!

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

 செல்போனை அதிகமாக உபயோகிப்பதால்-உடலுக்கு ஏற்படும் ஆபத்துகள்..!!

நம்மில் பெரும்பாலான மக்கள் காலையில் எழுந்தவுடன் செய்யும் முதல் காரியம் நமது போனை தேடுவது தான். போனை எடுத்து WhatsApp, Facebook, அல்லது Twitter என எதையாவது சிறிதுநேரம் நான் பயன்படுத்திவிட்டுத் தான் மற்ற வேலைகளைப் பார்க்கிறோம்.ஆனால் இது ஒரு ஆபத்தான காரியம் என்று நம்மில் பலர் அறியவில்லை. இன்றைய வாழ்க்கைச் சூழலில் ஸ்மார்ட்போன் என்பது அத்தியாவசிய பொருளாக மாறிவிட்டது.

இந்த செய்தியும் படிங்க...

உடல் எடையை குறைக்க - எளிய வழிமுறைகள் !!  

செல்போனை அதிகமாக உபயோகிப்பதால், உடலுக்கு ஏற்படும் ஆபத்து என்னவென்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் பார்ப்போமா!!!

1. தலைவலி:

 பயன்படுத்தும் சிலர், ஒற்றை தலைவலியால் நிறைய அவஸ்தைப்படுவார்கள். ஏனெனில் இதிலிருந்து வெளிவரும் கதிர்களின் கதிர்வீச்சு, காதுகளில் அடிக்கடி அதிகமான ஒலியை பாய்ச்சுவதால், அவை தலைவலியை தூண்டிவிடுகிறது.

2. சோர்வு:

மொபைல் போன்களில் இருந்து வெளிவரும் கதிர்கள், மூளையில் உள்ள செல்களை பாதித்து, விரைவிலேயே சோர்வை உண்டாக்கிவிடும். இதனால் எந்த ஒரு செயலையும் சரியாக செய்ய முடியாமல் போய்விடும்.

3. தூக்கமின்மை:

அளவுக்கு அதிகமாக செல்போன் பயன்படுத்தினால், மனதில் கவலை மற்றும் ஒருவித அழுத்தத்தை உண்டாக்கி, நிம்மதியான தூக்கத்தை கெடுத்துவிடும். மேலும் சில நேரங்களில் உளவியல் ரீதியான பிரச்சனையையும் உண்டாக்கிவிடும்.

இந்த செய்தியும் படிங்க...

 ஜலதோஷம், இருமலை நீக்க - மூலிகை டீ தயாரிப்பது எப்படி..??  

4. ஞாபக மறதி:

செல்போன்களில் அதிர்வுகள் மூளையில் தகவல்களை சேகரித்து வைக்கும் திறனுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் தான், அதிகமான அளவில் செல்போன் பயன்படுத்தினால், ஞாபக மறதி நோய் ஏற்படுகிறது.

5. மலட்டுத்தன்மை:

நிறைய ஆண்கள் செல்போன்களை பேண்ட் பாக்கெட்டுகளில் வைப்பதால், செல்போனிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சுகள் மற்றும் வெப்பம், விந்துக்களின் உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்தி, அவற்றை அழித்துவிடும்.

6. நச்சு எதிர்வினை:

செல்போனிலிருந்து வரும் கதிர்வீச்சுக்கள் இரத்தணுக்களை உடைத்து, மூளைக்கு செல்லும் இரத்தத்தில் ஒருவித நச்சுத்தன்மையை உண்டாக்கிவிடும்.

7. காது கோளாறு:

மொபைல் போனில் அளவுக்கு அதிகமான சப்தத்தில் வைத்து, நீண்ட நேரம் பாட்டு கேட்டாலோ அல்லது பேசினாலோ, அது செவிப்பறையில் அதிகமான அழுத்தத்தைக் கொடுத்து, காது வலி மற்றும் இதர பிரச்சனைகளை உண்டாக்கிவிடும்.

8. புற்றுநோய்:

செல்போனிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சுக்கள், உடலில் கட்டிகள் மற்றும் புற்றுநோயை உண்டாக்கும் செல்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். இது எந்த ஒரு ஆய்விலும் நிரூபிக்கப்படாவிட்டாலும், அது பற்றிய ஆய்வு நடந்து கொண்டிருக்கிறது. எனவே “வருமுன் காப்பதே நல்லது” என்பதற்கேற்ப, அதனை அதிகம் பயன்படுத்துவதை தவிர்க்கலாம்.

9. அடிமையாக்கும்:

நோமோஃபோபியா என்னும் ஒருவிதமான நோயை இது உண்டாக்கிவிடும். அதுவும் இது ஒருவித நிலையற்ற மனநிலையை உண்டாக்கி, வித்தியாசமான உலகில் இருப்பது போல் மனநிலையை மாற்றிவிடும். மேலும் சில நேரங்களில் அது இல்லாமல் எதையும் செய்யமுடியாது என்பது போல் செய்துவிடும்.

இந்த செய்தியும் படிங்க...

தலை வலியை குணமாக்கும் - வெந்நீர் வைத்தியம்..!! 

ஸ்மார்ட்போனை நம்மால் முற்றிலும் தவிர்த்துவிட முடியாது இந்த காலத்தில் ஸ்மார்ட்போனை நம்பி ஏராளமான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றது. எனவே ஸ்மார்ட் போனை நமது வருமானத்திற்கும் அல்லது நமது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் பேசி பழகுவதற்காக மட்டும் வைத்துக் கொண்டு இருந்தால், உடல் மட்டுமல்லாமல் மனதும் புத்துணர்வு பெறும். நடைபெறும் ஒவ்வொரு நாளும் புத்துணர்வோடு ஆரம்பமாகும்.


Post a Comment

0 Comments