"PLUS TWO மதிப்பெண் கணக்கீடு எவ்வாறு நடைபெறும்" - அமைச்சர் பேட்டி..!!
NEET தேர்வில் தமிழக அரசு என்ன நிலைப்பாட்டை எடுத்துள்ளது என்பது குறித்தும், PLUS TWO மதிப்பெண் கணக்கீடு பற்றியும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி விளக்கமளித்துள்ளார்.
இந்த செய்தியையும் படிங்க...
சளி மற்றும் காய்ச்சலைக் குணப்படுத்த வல்லது-அன்னாசிப் பழம்..!!
இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், "ONLINE வகுப்புகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய வரைவு அறிக்கையை முதலமைச்சரிடம் சமர்ப்பிக்க உள்ளோம். அவர் இதுகுறித்த முடிவை விரைவில் அறிவிப்பார்.
ONLINE வகுப்புகளுக்கான விதிமுறைகளை முன்வைக்கும்போது இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை எப்படி இருக்கும், பாடப்புத்தகங்களை எப்படி விநியோகிக்கப் போகிறோம், தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணத்தை எப்படி முறைப்படுத்தப் போகிறோம் என்பது குறித்த ஆலோசனைகளையும் குறிப்பிட்டுள்ளோம்.
NEET EXAM முதன்முதலாகத் தமிழகத்திற்குள் நுழைந்தபோது, எதிர்க்கட்சியாக இருந்தபோதும் தொடர்ந்து எதிர்த்து வந்தோம். NEET எதிர்த்துச் சட்டப்பேரவையில் குரல் கொடுத்திருக்கிறோம். இந்த முறை சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கையிலும் NEET EXAM எக்காரணத்தைக் கொண்டும் தமிழகத்திற்குள் வரக்கூடாது என்று தெரிவித்துள்ளோம்.
வலியுறுத்தும் விதமாகத்தான் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார். NEET EXAM மட்டுமல்ல எந்த வகையான ENTRANCE EXAM இருந்தாலும் அதை ரத்து செய்ய வேண்டும் என்றும் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
(+2) வகுப்பு மாணவர்களுக்குக் காலாண்டுத் தேர்வு, அரையாண்டுத் தேர்வு, யூனிட் தேர்வுகள் என எந்தத் தேர்வுகளும் நடைபெறாத சூழலில் எந்த அடிப்படையில் மதிப்பெண் கணக்கிடப்படும் என்று கேள்வி எழுகிறது.
பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர், உயர் கல்வித்துறைச் செயலாளர், சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், பள்ளித் தலைமை ஆசிரியர்களின் பிரதிநிதி ஆகியோரை வைத்து ஒரு குழு அமைக்கப்படும். அந்தக் குழு அமைக்கப்பட்ட உடன் விரைவாக மதிப்பெண்களை மதிப்பிடும் பணிகள் தொடங்கும். இதுகுறித்து முதலமைச்சரும் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
இந்த செய்தியையும் படிங்க...
வால்நட்டில் WALNUT அடங்கியுள்ள ஊட்டசத்துக்களும் , மருத்துவ பயன்களும்..!!
0 Comments