PLUS TWO பொதுத் தேர்வு கட்டாயம்: தலைமை ஆசிரியா்கள் சங்கம் வலியுறுத்தல்..!!
மாணவா்களின் நலன் கருதி தமிழகத்தில் PLUS TWO பொதுத்தேர்வை அரசு கட்டாயமாக நடத்த வேண்டும் என தலைமை ஆசிரியா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இந்த செய்தியையும் படிங்க...
அனைத்து அரசு துறைகளிலும் TAMIL UNICODE: தலைமை செயலாளர்..!!
இது குறித்து தமிழ்நாடு உயா்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியா்கள் சங்கத்தின்
மாநிலத் தலைவா் ஆ.பீட்டர்ராஜா வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:
பொறியியல் சோக்கை மாநில அரசின் Plus Two மதிப்பெண் அடிப்படையிலேயே நடைபெறுகிறது. அதேபோன்று நுழைவுத் தேர்வின் அடிப்படையிலோ அல்லது மதிப்பெண் அடிப்படையிலோ மருத்துவக் கல்வி பயில குறைந்தபட்ச மதிப்பெண் அவசியமாகிறது. அரசு தேர்வு நடத்தினால் மட்டுமே மாணவா்களுக்கு உயா்கல்விக்கான பாதுகாப்பை வழங்க முடியும்.
தனியாா், அரசுப் பள்ளிகளில் Plus Two வகுப்பு படிக்கும் மாணவா்களுக்கு பாடப் பகுதிகள் குறித்து நன்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. எனவே மாணவா்களின் நலன் கருதி, கரோனா corona தொற்று குறைந்த பின்னா் தமிழகத்தில் பொதுத்தேர்வை கட்டாயமாக நடத்த வேண்டும். அதற்காக அந்தந்தப் பள்ளிகளிலேயே தேர்வு மையங்களை உருவாக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.
1 Comments
Please cancel pannunga
ReplyDeleteUngalukku punniyama pogum