PLUS TWO:'வேறு மாற்று வழி இல்லாததால், பொதுத் தேர்வு நடத்த வேண்டிய கட்டாயமாகிறது..!!
PLUS TWO- தேர்வை நடத்த உச்ச நீதிமன்றத்தில் அனுமதி கேட்கும் ஆந்திர மாநிலம்..!!
'வேறு மாற்று வழி இல்லாததால், PLUS TWO பொதுத் தேர்வு நடத்த வேண்டிய கட்டாயமாகிறது. எந்தப் பிரச்னையும் இல்லாமல் வெற்றிகரமாக நடத்திக் காட்டுவோம். தேர்வு நடத்த அனுமதிக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றத்தில், ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.
இந்த செய்தியையும் படிங்க...
மேனிலைப் பள்ளி மாணவர்களுக்கு -வரும் ஜுலையில் பள்ளிகள் தொடங்கப்படலாம்..!!
CORONA வைரஸ் பரவல் அதிகமாக உள்ளதால், (+2) பொதுத் தேர்வுகளை ரத்து செய்வதாக, CBSE., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் அறிவித்துள்ளது. மாநில கல்வி வாரிய தேர்வுகள் தொடர்பாக, உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது.இந்நிலையில், ஆந்திர அரசு தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில், தற்போது கொரோனா வைரஸ் பரவல் மாநிலத்தில் குறைவாகவே உள்ளது. 10th தேர்வில் மாணவர் களுக்கு, 'கிரேடு' (Grade) முறையே வழங்கப்படுகிறது.
அதனால், முந்தையத் தேர்வுகள் அடிப்படையிலோ, பள்ளி அளவில் நடந்த தேர்வுகள் அடிப்படையிலோ, PLUS TWO மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்க முடியாது.மாணவர் நலன் கருதி, தேர்வுகளை நடத்த அனுமதிக்க வேண்டும்.ஏற்கனவே, செய்முறை தேர்வுகள் (Practical Exam) முடிந்து விட்டன.
இந்த செய்தியையும் படிங்க...
July இறுதி வாரத்தில் இருந்து தேர்வு நடத்த திட்டமிட்டு உள்ளோம்.போதிய கொரோனா பாதுகாப்பு அம்சங்களுடன் தேர்வுகளை நடத்த அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இது, இன்று விசாரிக்கப்பட உள்ளது.
0 Comments