Join Our Whats app Group Click Below Image

PAN-AADHAAR NUMBER: இணைக்க செப்டம்பர் 30-ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு..!!

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

 PAN-AADHAAR NUMBER: இணைக்க செப்டம்பர் 30-ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு..!!

ADHAAR - PAN NUMBERஇணைப்பதற்கான கால அவகாசத்தை மத்திய அரசு மேலும் 3 மாதங்கள் நீட்டித்துள்ளது.

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி அறிவிக்கை வெளியிட்டது. அதன்பிறகு ஆதார்-பான் இணைப்புக்கான அவகாசம் பல முறை நீட்டிக்கப்பட்டது.

இந்த செய்தியையும் படிங்க....

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேலை-2021..!!

குடிமக்களுக்கு ஆதார் அட்டை வழங்குவதற்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் வருமான வரி செலுத்துவதற்கு ஆதார் எண் கட்டாயம் என்றும் தீர்ப்பளித்தது.

இதன் பிறகு பான் கார்டு வைத்திருக்கும் அனைவரும் தங்களது பான் எண்-ஐ ஆதார் எண்ணுடன் இணைக்கவேண்டும் என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்தது.

பலமுறை ஆதார் பான் இணைப்பிற்கான கால அவகாசத்தை நீட்டிப்பு செய்த மத்திய அரசு ஜூன் 30-ம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என அறிவித்தது.

இந்தநிலையில் ஆதார் - பான் எண் இணைப்பதற்கான கால அவகாசத்தை மத்திய அரசு மேலும் 3 மாதங்கள் நீட்டித்துள்ளது. செப்டம்பர் 30-ம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர் அறிவித்துள்ளார்.

ஏற்கெனவே பலரும் ஆதார் - பான் எண்-ஐ வருமான வரி செலுத்தும் போது இணைத்திருப்பதற்கு வாய்ப்பு உள்ளது. ஆனால் சரியாக உங்கள் பான் மற்றும் ஆதார் இணைக்கப்பட்டு உள்ளதாக என்பதைக் கட்டாயம் சரிபார்க்க வேண்டும்.

ஆதார் - பான் இணைப்பது எப்படி?

1. //www.incometaxindiaefiling.gov.in என்ற இணையதளத்துக்குச் செல்ல வேண்டும்.

2. Link Aadhaar என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.

3. திரையில் தோன்றும் பக்கத்தில், பான் எண், ஆதார் எண், பெயர் (ஆதாரில் உள்ளபடி) ஆகியவற்றை டைப் செய்ய வேண்டும்.

4. ஆதாரில் பிறந்த தேதி முழுமையாக இல்லாமல் பிறந்த ஆண்டு மட்டும்தான் இருக்கிறது என்றால், I have only year of birth in Aadhaar Card என்பதை டிக் செய்யவும்.

5. விவரங்களை சோதித்து ஆதாரை இணைப்பதற்கு ஒப்புதல் வழங்க I agree to validate my Aadhaar details with UIDAI என்பதையும் டிக் செய்யவும்.

6. Capcha எனப்படும் குறியீட்டு எழுத்துக்களை டைப் செய்து அல்லது ஓடிபி பெற்று Link Aadhaar பட்டனை கிளிக் செய்யவும்.

7. உங்கள் ஆதார்- பான் கார்டு இணைக்கப்பட்டு விடும்.

ஏற்கெனவே இணைக்கப்பட்டுள்ளதா என்பது உறுதி செய்ய:

மீண்டும் வருமான வரித்துறையின் இணையதளத்தின் Link Aadhaar பக்கத்திலேயே view status பகுதியை கிளிக் செய்து பான் மற்றும் ஆதார் எண்ணை டைப் செய்து உறுதி செய்து கொள்ள முடியும்.

இந்த செய்தியையும் படிங்க....

8th PASS: தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு..!! 

ஏற்கெனவே உங்கள் பான் மற்றும் ஆதார் இணைக்கப்பட்டு இருந்தால் Your pan is Linked to Aadhaar Number XXXXXXXX என்ற செய்தி கிடைக்கும்.

Post a Comment

0 Comments