PAN - Aadhaar Link: இணைக்கத் தவறினால் என்னவெல்லாம் பாதிப்பு ஏற்படும்..??
வருமான வரி(INCOME TAX) சட்டப்படி 2021 ஜூன் 30-ம் தேதிக்குள் பான் கார்ட் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும். ஆதார் - பான் இணைக்கவில்லை என்றால் உங்கள் வாடிக்கையாளர்களை அறிந்து கொள்ளுங்கள் என்கிற KYC செல்லாது. மேலும், பான் எண்ணும் செயல்பாட்டில் இருக்காது.
KYC செயல் இழந்துவிட்டால் மியூச்சுவல் ஃபண்டில் புதிய முதலீட்டை மேற்கொள்ள முடியாமல் போகும் சூழ்நிலை உருவாகும். குறிப்பாக, சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் SIB முதலீட்டு முறை செயல்படாது.
ஏற்கனவே பலமுறை இதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், இப்போது ஜூன் 30-ம் தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் அவகாசம் கிடைக்குமா என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது. எனவே, முதலீட்டுக்கு பாதிப்பு வராமல் இருக்க பான் ஆதார் எண்ணை முன் கூட்டியே இணைத்துவிடுவது நல்லது.
பான் கார்டு, ஆதார் கார்ட் இணைப்பு என்பது பெரிய வேலை இல்லை. மொபைல் நம்பர் மூலம் இணைக்கலாம். மொபைல் SMS மூலமும் இணைக்கலாம். நீங்கள் 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு SMSஅனுப்புவதன் மூலம் இணைத்து கொள்ளலாம். உங்கள் மொபைல் எண்ணிலிருந்து இருந்து UIDPAN 12 இலக்க ஆதார் எண் 10 இலக்க பான் நம்பரை டைப் செய்து எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். உதாரணம், UIDPAN 111322253337 BASPA0005H
ஆன்லைன் மூலமாகவும் இணைக்கலாம். ஆன்லைனில் இணைக்க https://eportal.incometax.gov.in/iec/foservices/#/pre-login/bl-link-aadhaar
உங்களின் பான் மற்றும் ஆதார் எண், பெயர், பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் ஆகியவற்றை நிரப்ப வேண்டும். ஒரு முறை பயன்படுத்தும் பாஸ் வேர்ட் (OTP) வரும். அதைப் பதிவு செய்த பின்னர் லிங்க் ஆதார் என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.
ஆன்லைனிலோ, எஸ்.எம்.எஸ் மூலமாகவே இணைக்க முடியாவிட்டால், நீங்கள் நேரில் சென்றும் இணைக்கலாம். இதற்காக நீங்கள் பான் சேவை மையத்துக்கு சென்று இணைப்பு படிவம் (Annexure-I) நிரப்பி, அதனுடன் பான் அட்டை மற்றும் ஆதார் கார்டு நகல் இணைத்துக் கொடுக்க வேண்டும்.
பான் எண் செயல்பாட்டில் இல்லை என்றால் ஃபிக்ஸட் டெபாசிட் போட்டிருப்பவர்கள், மூலத்தில் வரி பிடிக்காமல் இருக்க, 15G, 15H படிவங்களை சமர்ப்பிக்க முடியாது. பான் எண் செல்லாது என்றால் 10%-க்கு பதில் 20 சதவிகிதம் டி.டி.எஸ் பிடிக்கப்படும்
பான் - ஆதார் எண் இணைப்பை உறுதி செய்ய: https://eportal.incometax.gov.in/iec/foservices/#/pre-login/link-aadhaar-status
0 Comments