Join Our Whats app Group Click Below Image

ஆசிரியர்களுக்கான இடமாறுதல்:ஜூலைக்குள் ONLINE வழி கவுன்சிலிங்கை நடத்த- பள்ளி கல்வித்துறைஉத்தரவு..!!

Welcome to Our Tamil Crowd Website...

ஆசிரியர்களுக்கான இடமாறுதல்:ஜூலைக்குள் ONLINE  வழி கவுன்சிலிங்கை நடத்த- பள்ளி கல்வித்துறைஉத்தரவு..!!

ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங்கை, ஒரு மாதத்தில் நடத்த, பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக காலியிட விபரங்களை அனுப்ப உத்தரவிடப்பட்டு உள்ளது.

தமிழக பள்ளி கல்வித்துறையில், அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, ஆண்டுதோறும் இடமாறுதல் கவுன்சிலிங், 'ஆன்லைன்' முறையில் நடத்தப்படும்.

இந்த செய்தியையும் படிங்க... 

அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை மூட- தொடக்க கல்வி இயக்குநரகம் உத்தரவு..!! 

கடந்த ஆண்டு கொரோனா தொற்று பிரச்னையால், பள்ளிகளை திறக்க தாமதமானதால், விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படவில்லை. இந்நிலையில், புதிதாக அமைந்துள்ள தி.மு.க., அரசு, ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங்கை நடத்த, பள்ளி கல்வித்துறைக்கு அனுமதி வழங்கி உள்ளது. இந்த ஆண்டு பள்ளிகளை திறக்கும் முன், கவுன்சிலிங்கை முடித்து விடவும் திட்டமிடப்பட்டு உள்ளது. 

அதற்கான முன்னேற்பாடு பணிகள் துவங்கிஉள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும், ஆசிரியர்களின் காலியிட பட்டியலை சேகரிக்க, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளி கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. 

அரசு பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி, முதுநிலை பட்டதாரி, சிறப்பு பாட பிரிவுகள், உடற்கல்வி, கணினி உள்ளிட்ட அனைத்து வகை ஆசிரியர் பதவிகளையும் பட்டியலிட்டு, உடனே இயக்குனரகத்துக்கு அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

CORONA தொற்று குறையும் நிலையில், ஒரு மாதத்துக்குள் அதாவது, JULY-குள் ONLINE வழி கவுன்சிலிங்கை நடத்த, பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

இந்த செய்தியையும் படிங்க... 

கருப்புப் பணம் (Black Money)வங்கிகளில் டெபாசிட் :வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவு..!! 



Post a Comment

0 Comments