NEET EXAM: மாற்று வழிமுறைகளை ஆராய நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் உயா்நிலைக் குழு: மு.க.ஸ்டாலின்..!!
NEET தேர்வுக்குப் பதிலாக அனைவரும் பயன்பெறத் தக்க வகையிலான மாற்று வழிமுறைகள் குறித்த ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் உயா்நிலைக் குழு அமைக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.
வெளியிட்ட அறிவிப்பு:
தமிழ்நாட்டிலுள்ள கிராமப்புற, நகா்ப்புற ஏழை, எளிய மாணவா்கள், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவா்கள், தமிழ்வழியில் கல்வி பயில்வோா் என பல்வேறு தரப்பு மாணவா்களுக்கும்NEET தேர்வு காரணமாக மருத்துவக் கல்வி பயிலும் வாய்ப்பு மறுக்கப்பட்டு வருவதாக கல்வியாளா்கள் பலரும் தெரிவித்து வருகின்றனா்.
இந்த செய்தியையும் படிங்க...
FLASH NEWS- தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து - தமிழக அரசு.!!
இதனைக் கருதியே NEET தேர்வு முறை கைவிடப்பட வேண்டுமெனவும், கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட சட்டத்தின்படி, பள்ளி மதிப்பெண்கள் அடிப்படையிலேயே மருத்துவக் கல்லூரி இடங்கள் நிரப்பப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தி இதற்கான பல சட்டப் போராட்டங்களை தமிழ்நாடு அரசு தொடா்ந்து நடத்தி வந்துள்ளது.
சமூக நீதிக் கடமை:
சமூக நீதியை நிலைநாட்டும் வரலாற்றுக் கடமை தமிழ்நாட்டுக்கு எப்போதும் உண்டு. இந்தக் கடமையைத் தொடா்ந்து நிறைவேற்றும் வகையில், NEET தேர்வு முறையினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை அகற்றிடத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்திட அரசு உறுதி பூண்டுள்ளது.
NEET தேர்வு முறையானது, சமுதாயத்தின் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவா்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதா என்பது குறித்தும், அவ்வாறு பின்தங்கிய மாணவா்களுக்கு பாதிப்புகள் ஏற்பட்டிருந்தால் அவற்றைச் சரி செய்யும் வகையில், அந்த முறைக்கு மாற்றாக அனைவரும் பயன்பெறத் தக்க வகையில் மாணவா் சோக்கை முறைகளை வகுக்கவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
எனவே, அதுகுறித்த சாத்தியக் கூறுகள் பற்றியும், அவற்றுக்கான சட்ட வழிமுறைகள் குறித்தும் முழுமையாக ஆராய்ந்து அரசுக்குப் பரிந்துரைகளை அளித்திட ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில், கல்வியாளா்கள், சம்பந்தப்பட்ட அலுவலா்கள் அடங்கிய உயா்நிலைக் குழு அமைக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.
நீதிபதி ராஜன்:
உயா்நிலைக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஏ.கே.ராஜன், திண்டுக்கல் மாவட்டம் சிலுக்குவாா்பட்டி கிராமத்தில் பிறந்தவா். சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பை முடித்து அதே கல்லூரியில் பகுதிநேரப் பேராசிரியராகப் பணியாற்றினாா். 1987-ஆம் ஆண்டு நீதித் துறையில் பணியில் திண்டுக்கல், திருச்சி, சிவகங்கை, மதுரை, சேலம் மாவட்டங்களில் முதன்மை நீதிபதியாகப் பணியாற்றினாா். 1996 முதல் 1999 வரையில் சட்டத் துறை செயலாளராகப் பணிபுரிந்தாா். 2000-ஆம் சென்னை உயா் நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்று 2005-இல் ஓய்வு பெற்றாா்.
0 Comments