LOCKDOWN தளர்வு: (BIKE, AUTO, CAR )- How to Apply for Vehicle Pass..??
CORONA-வை கட்டுப்படுத்த விதிக்கப்பட்டிருந்த (FULL LOCKDOWN) முடிவுக்கு வந்தது. CORONA சிறிது குறைந்த நிலையில் JUNE 7 முதல் LOCKDOWN-ல் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் e-Registration செய்து வாடகை ஆட்டோக்கள், கார்களில் பயணிப்பதற்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியையும் படிங்க...
Sep., Octo., தொடங்கும் கொரோனா 3வது அலை - Niti Aayog உறுப்பினர் தகவல்..!!
இந்நிலையில் TN e-Registration செய்வதற்கான இணையதளத்தில் (Website) கூடுதலாக வாடகை வாகன பயணத்திற்கு அனுமதி பெறுவதற்கான இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தளர்வுளுடன் முழு ஊரடங்கு (Full Lockdown)அமலான நிலையில் e-Registration இணைய தளத்தில், இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் மற்றும் கார்களுக்கு பதிவு செய்ய Link இணைக்கப்பட்டுள்ளது .தனிநபர் மற்றும் குழுவாக சாலை வழிப்பயணம் என்ற Link-கிற்கு சென்றால், இரு சக்கரங்கள் ,ஆட்டோக்கள், கார்கள் ஆகியவை மாவட்டங்கள்(District) மற்றும் மாநிலங்களுக்கு (State) இடையே செல்வதற்கு பதிவு செய்யலாம்,. இதில் உரிய காரணங்களை பதிவு செய்து அதற்கான இ- பதிவை (e-Registration)பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இதில் June 7முதல் ஆட்டோ மற்றும் கார் மூலமாக மூன்று பேர் வரை பயணம் செய்யலாம் என்று அரசு அறிவித்துள்ள நிலையில் அதற்கான நடைமுறை e-Registration பதிவு இணையதளத்தில் Link கொடுக்கப்பட்டுள்ளது
மேலும்e-Registration இணையதளத்தில் (https://eregister.tnega.org) தனிநபர் மற்றும் குழுவாக சாலை வழிப்பயணம் என்ற இணைப்பிற்கு சென்று பயணத்தின் முறை குறித்து குறிப்பிட்டு Register செய்ய வேண்டும். என்ன காரணத்திற்காக பயணம் என்ற விளக்கத்தையும் இங்கு குறிப்பிட வேண்டும்.
மருத்துவ காரணம், இறப்பு அல்லது ஈம சடங்குகள், தன்னார்வலர்கள், மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்களுக்கு மற்றும் மற்றவை ஆகிய பிரிவுகள் இதில் தரப்பட்டுள்ளன. இதில் உரிய காரணத்தை தேர்வு செய்து பதிவு செய்ய வேண்டும்.
0 Comments