Join Our Whats app Group Click Below Image

Lockdown நீட்டிப்பு : 23 மாவட்டங்களில் என்னென்ன தளர்வுகள்..??

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

 Lockdown  நீட்டிப்பு: 23 மாவட்டங்களில் என்னென்ன தளர்வுகள்..??

தமிழகத்தில் வருகின்ற June 28 ஆம் தேதி வரை புதிய தளர்வுகளுடன் Lockdown நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் வருகின்ற June  28-ம் தேதி வரை புதிய தளர்வுகளுடன் கூடிய Lockdown  அமல்படுத்தப்பட்டுள்ளது.மேலும்,மூன்று வகையாக மாவட்டங்களை பிரித்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியும் படிங்க...

வீட்டை விட்டு வெளியே செல்வோர் தவறாமல் பின்பற்ற வேண்டிய விஷயங்கள்..!! 

அதன்படி,

அரியலூர், கன்னியாகுமரி, இராமநாதபுரம், திருநெல்வேலி, கடலூர், கிருஷ்ணகிரி, இராணிப்பேட்டை, திருப்பத்தூர், தருமபுரி, மதுரை, திண்டுக்கல், பெரம்பலூர், சிவகங்கை, தேனி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, தென்காசி, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், வேலூர் மற்றும் விருதுநகர் உள்ளிட்ட 23 மாவட்டங்களில் என்னென்ன தளர்வுகள் என்று காண்போம்:

  • தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் காலை 6.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
  • காய்கறி, பழம் மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதைக் கடைகள் காலை 6.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
  • உணவகங்கள் மற்றும் அடுமணைகளில் (hotels, restaurants and bakeries) பார்சல் சேவை மட்டும் காலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை அனுமதிக்கப்படும். மின் வணிகம் (e-commerce) மூலம் உணவு விநியோகம் செய்யும் அனைத்து மின் வணிக நிறுவனங்கள் மேற்கண்ட நேரங்களில் மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.
  • இதர மின் வணிக சேவை நிறுவனங்கள் (E-commerce) காலை 06.00 மணி முதல் இரவு 09.00 வரை இயங்கலாம்.
  • இனிப்பு மற்றும் காரவகை விற்பனை செய்யும் கடைகள் காலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
  • அரசின் அனைத்து அத்தியாவசியத் துறைகள் 100% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.இதர அரசு அலுவலகங்கள் 50 % பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
  • சார்பதிவாளர் அலுவலகங்கள் முழுமையாக செயல்பட அனுமதிக்கப்படும்.
  • அனைத்து தனியார் நிறுவனங்கள் 33% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
  • ஏற்றுமதி நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இடுபொருள் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள் 100 சதவிகித பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும்.
  • இதர தொழிற்சாலைகள் 33% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
  • மின் பொருட்கள், பல்புகள், கேபிள்கள், ஸ்விட்சுகள் மற்றும் ஒயர்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
  • மிதிவண்டி மற்றும் இருசக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
  • ஹார்டுவேர் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
  • வாகனங்களின் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
  • வாகனங்கள் விற்பனை செய்யும் நிறுவனங்கள் மற்றும் விநியோகஸ்தர்களது கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
  • கல்விப் புத்தகங்கள் மற்றும் எழுதுபொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
  • வாகன விநியோகஸ்தர்களது வாகன பழுதுபார்க்கும் மையங்கள் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
  • காலணிகள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
  • கண்கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
  • மிக்சி, கிரைண்டர், தொலைக்காட்சி போன்ற வீட்டு உபயோக மின் பொருட்களின் விற்பனை மற்றும் பழுதுநீக்கும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
  • மண்பாண்டம் மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரித்தல் மற்றும் விற்பனை காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
  • மின் பணியாளர் (Electricians), பிளம்பர்கள் (Plumbers), கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர் (Motor Technicians) மற்றும் தச்சர் போன்ற சுயதொழில் செய்பவர்கள் சேவை கோருபவர் வீடுகளுக்குச் சென்று பழுது நீக்கம் செய்ய காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இ-பதிவுடன் அனுமதிக்கப்படுவர்.
  • செல்பேசி மற்றும் அதனைச் சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
  • கட்டுமானப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
  • அனைத்து வகையான கட்டுமானப் பணிகள் அனுமதிக்கப்படும்.
  • பள்ளி, கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை தொடர்பான நிருவாகப் பணிகள் அனுமதிக்கப்படும்.
  • காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை விளையாட்டு பயிற்சி குழுமங்கள் இயங்கவும், பார்வையாளர்கள் இல்லாமல், திறந்த வெளியில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தவும், அனுமதிக்கப்படும்.
  • திரையரங்குகளில், தொடர்புடைய வட்டாட்சியரின் அனுமதி பெற்று வாரத்தில் ஒரு நாள் மட்டும் பராமரிப்பு பணி மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.
  • வாடகை வாகனங்கள்,டாக்ஸிகள், மற்றும் ஆட்டோக்களில் பயணிகள் இ-பதிவுடன் செல்ல அனுமதிக்கப்படுவர்.மேலும்,வாடகை டேக்ஸிகளில், ஓட்டுநர் தவிர மூன்று பயணிகளும், ஆட்டோக்களில், ஓட்டுநர் தவிர இரண்டு பயணிகள் மட்டும் பயணிக்க அனுமதிக்கப்படுவர்.
  • வீட்டு வசதி நிறுவனம் (HFCs) வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (NBFCs), நிதி நிறுவனங்கள் (MFIs) 33 % பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.


Post a Comment

0 Comments