Join Our Whats app Group Click Below Image

எலுமிச்சை சாறு (Lemon Juice) - கிடைக்கும் நன்மைகள்..!!

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

 எலுமிச்சை சாறு (Lemon Juice) - கிடைக்கும் நன்மைகள்..!!

எலுமிச்சை பழத்தில்(Lemon) எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. அதனால் தான் எந்த ஒரு ஆரோக்கிய பிரச்சனைக்கு இயற்கை வழியை நாடும் போதும் அதில் நிச்சயம் எலுமிச்சை முக்கிய பங்கு வகிக்கிறது. அந்தவகையில் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான எலுமிச்சை சாறு(Lemon Juice) குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்போம்.

இந்த செய்தியையும் படிங்க...

 'உருமாறிய (Corona Virus)களுக்கு'-(Greek Letters)க்களை பெயர்களாக அறிவித்துள்ளது: WHO..!!

* செரிமானத்திற்கு உதவும் பித்தநீரை சுரக்க எலுமிச்சை (Lemon) உதவுகிறது. இதில் கனிமச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் (Vitamins) அதிகம் இருப்பதால், அவை செரிமான பாதையில் உள்ள டாக்ஸின்களை எளிதில் வெளியேற்றும். காலையில் வெதுவெதுப்பான நீரில் செய்யப்பட்ட எலுமிச்சை சாறு (Lemon Juice) குடிப்பதால் குடலியக்கம் சீராக இருக்கும்.

* ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறினை பிழிந்து, அதில் தேன் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் பருக வேண்டும். இதனால் எலுமிச்சையில் உள்ள பெக்டின் என்னும் நார்ச்சத்து நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுக்கும். மேலும் இதனால் கிடுகிடுவென உடல் எடை குறையும்.

* எலுமிச்சையானது இரத்தத்தில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றுவதோடு மட்டுமின்றி, புதிய இரத்த செல்களின் உற்பத்திக்கும் உதவியாக உள்ளன. அதிலும் இந்த சாறிவில் தேன் சேர்த்து குடிப்பதால், அவை கொலாஜனை ஊக்குவித்து, சருமத்தை சுத்தமாகவும், பொலிவோடும் வைத்துக் கொள்ள உதவுகிறது.

* எலுமிச்சையில் வைட்டமின் சி (Vitamin C)வளமாக நிறைந்திருப்பதால், அவற்றை வெதுவெதுப்பான நீருடன் சேர்த்து பருகும் போது, உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நோய்களின் தாக்கத்தில் இருந்து உடலைப் பாதுகாக்கும்.

இந்த செய்தியையும் படிங்க...

கொரோனா வைரஸ் தடுப்பூசி கேள்விகளும், பதில்களும்..!!

* எலுமிச்சையானது செரிமான பாதையில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்ற உதவுகிறது. அதே சமயம் அவை சிறுநீரின் அளவை அதிகரித்து, உடலில் தங்கியுள்ள நச்சுக்களை சிறுநீர் வழியாக வெளியேற்றி சிறுநீரகத்தை ஆரோக்கியமாக செயல்படவும் வைக்கிறது. அதுமட்டுமின்றி, எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் ஆசிட், கல்லீரலில் உள்ள நொதிகளின் செயல்பாட்டினை ஊக்குவிக்கிறது.

Post a Comment

0 Comments