Join Our Whats app Group Click Below Image

JULY 1 முதல்: ஓட்டுநர் உரிமம், ATM கட்டணம், LPG விகிதங்கள் நிர்ணயம், வருமான வரி போன்றவைகளில் முக்கிய மாற்றங்கள்..!!

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

 JULY  1 முதல்: ஓட்டுநர் உரிமம், ATM கட்டணம், LPG விகிதங்கள் நிர்ணயம், வருமான வரி போன்றவைகளில் முக்கிய மாற்றங்கள்..!!


ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வரவுள்ள SBI  வாடிக்கையாளர்களுக்கான ATM  கட்டணம்,ஓட்டுநர் உரிமம் புதிய விதி போன்றவை குறித்து தெரிந்து கொள்வோம். ஜூலை 1 ஆம் தேதி முதல்,ஓட்டுநர் உரிமம் மற்றும் வரிவிதிப்பு உள்ளிட்டவற்றில் சில முக்கிய மாற்றங்கள் நடைமுறைக்கு வரவுள்ளன.அதன்படி,

 STATE BANKOF INDIA வாடிக்கையாளர்களுக்கான ATM கட்டணம்: 

  • ஜூலை 1 ஆம் தேதி முதல், SBI  வாடிக்கையாளர்கள், ATM  மூலமாக ஒரு மாதத்தில் நான்கு முறை மட்டுமே இலவசமாக பரிவர்த்தனைகள் மேற்கொள்ள முடியும்.
  • அதற்கு மேல் உபயோகித்தால் கூடுதலாக ரூ .15 + GST கட்டணங்கள் செலுத்த வேண்டும். 

LPG விகிதங்கள் நிர்ணயம்: 

எண்ணெய் நிறுவனங்கள் சந்தை ஏற்ற இறக்கங்கள், தேவை மற்றும் விநியோக இடைவெளியின் படி,ஜூலை 1 முதல் ஒவ்வொரு பதினைந்து நாட்கள் இடைவெளியில் திரவ பெட்ரோலிய எரிவாயு (LPG ) அல்லது சமையலறை எரிவாயுவின் விலைகள் நிர்ணயிக்கப்படவுள்ளன. 

வருமான வரி- விவாட் சே விஸ்வாஸ்: 

மத்திய அரசானது 'விவாட் சே விஸ்வாஸ்' திட்டத்தின் கீழ் வருமான வரி செலுத்துவதற்கான கட்டணத்தை வட்டி இல்லாமல் ஜூன் 30 முதல் ஆகஸ்ட் 31 வரை இரண்டு மாதங்களுக்கு நீட்டித்தது.

 ஓட்டுநர் உரிமம்: 

ஓட்டுநர் உரிமத்தைப் பெற,இனி போக்குவரத்து அலுவலகத்திற்கு (RTO) செல்ல வேண்டியதில்லை.ஏனெனில், ஜூலை 1 முதல் புதிய விதிகளின்படி, இனி ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளிலே அதற்கான பயிற்சியை முடித்து விட்டு ஓட்டுநர் உரிமத்தைப் பெறலாம்.

Post a Comment

0 Comments