Join Our Whats app Group Click Below Image

'JOURNEY OF A CIVILIZATION: INDUS TO VAIGAI '-சோனியாவுக்கு ஸ்டாலின் பரிசளித்த புத்தகம்..!!

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

 'JOURNEY OF A CIVILIZATION: INDUS TO VAIGAI ' -சோனியாவுக்கு ஸ்டாலின் பரிசளித்த புத்தகம்..!!

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் புது தில்லியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.

இந்த செய்தியும் படிங்க...

கல்வித் தொலைக்காட்சியில் (2021-2022) பாடங்கள்:முதல்வா் (JUNE 19) தொடக்கி வைக்கிறாா்..!!  

இந்த சந்திப்பின் போது, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தியும் முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலினும் உடன் இருந்தனர்.

சோனியா காந்தியுடனான சந்திப்பில், முதல்வர் ஸ்டாலின் பொன்னாடை மற்றும் ஒரு புத்தகத்தையும் பரிசளித்தார். அந்த புத்தகத்தின் பெயர் 'JOURNEY OF A CIVILIZATION:INDUS TO VAIGAI ' என்பதாகும்.

இந்தப் புத்தகத்தை எழுதியவர் இந்திய ஆட்சிப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற ஆர். பாலகிருஷ்ணன். இந்திய ஆட்சிப் பணியில் பேரிடர் மேலாண்மை, தேர்தல் மேலாண்மை என பல்வேறு உயர் பதவிகளை வகித்து, ஓய்வுபெற்ற பிறகு ஒடிசா மாநில அரசின் ஆலோசகராக பணியாற்றி வரும் இவர், சிந்து சமவெளி பண்பாட்டு ஆராய்ச்சியிலும் ஈடுபட்டுள்ளார். சிறந்த எழுத்தாளர், இசைப்பாடல்கள், ஊர்ப் பெயர் ஆராய்ச்சி என பல்வேறு துறைகளில் தனது முத்திரையைப் பதித்துள்ளார்.

இவர் எழுதியிருக்கும் 'JOURNEY OF A CIVILIZATION:INDUS TO VAIGAI ' புத்தகம் சிந்து முதல் வைகை நதி வரையிலான ஒரு நாகரீகத்தின் பயணத்தை விலக்குவதாக அமைந்துள்ளது.

இந்தப் புத்தகம் பற்றி ஆர். பாலகிருஷ்ணன் கூறுகையில், சிந்து வெளிவிட்ட இடமும் சங்க இலக்கியம் தொட்ட இடமும் என்பதே. இது இரண்டும் ஒன்றே. இந்தியவியலின் இருபெரும் புதிர்களான சிந்து வெளி புதிரும் தமிழ்தொன்மை புதிரும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை மட்டுமல்ல இரண்டும் நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்றும் அவர் கூறுகிறார்.

இந்த செய்தியும் படிங்க...

"அரசுப்பள்ளிகளில்: ஆங்கில பயிற்சியை மேம்படுத்துங்கள்" - கமல்ஹாசன்..!!  

பொதுவாக இந்தப் புத்தகத்தைப் படித்தவர்கள் கூறும் விமர்சனத்தில், இந்திய வரலாற்றை அதிலும் குறிப்பாக அதன் கலாசார வரலாற்றை அறிந்து கொள்ள விரும்புவோர் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம். அது மட்டுமல்லாமல், தமிழகத்தின் வைகை நதிக்கரையோரம் அமைந்திருக்கும் கீழடி பகுதியில் நடைபெற்று வரும் தொல்பொருள் ஆராய்ச்சி பற்றி அறிய ஆர்வம் கொண்டவர்களும் இந்தப் புத்தகத்தைப் படிக்கலாம் என்று கூறுகிறார்கள்.

Post a Comment

0 Comments