Join Our Whats app Group Click Below Image

`நீங்களும் IAS ஆகலாம்!' - இலவச வழிகாட்டல் நிகழ்ச்சி.?

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

 `நீங்களும் IAS ஆகலாம்!' - இலவச வழிகாட்டல் நிகழ்ச்சி.?

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் சாதிக் IAS., அகாடமி, Civil Service தேர்வுகளுக்கு மாணவர்களைச் சிறந்த முறையில் தயார்ப்படுத்தி வருகிறது. மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் தனி கவனம் செலுத்துவதன் மூலம், அனைத்து வகையிலும் தேர்வுக்குத் தயார்ப்படுத்தி அவர்களின் கனவை நனவாக்கிக் கொண்டிருக்கிறது. இந்தியா முழுவதும் உள்ள Civil Service படிப்பகங்கள் சாதிக் IAS., அகாடமியின் சமூக வலைதளப் பக்கங்களைத் தவறாமல் பின்பற்றிவருகின்றன.

வழிகாட்டல் நிகழ்ச்சி

இந்தப் பின்னணியில், லட்சக்கணக்கான மாணவர்களின் IAS கனவுக்கு வழிகாட்டும் முன்னெடுப்பாக ஆனந்த விகடன் இதழும் சாதிக் IAS அகாடமியும் இணைந்து 'நீங்களும் IAS ஆகலாம்! - சாதிக்கத் துடிப்போருக்கான வழிகாட்டல் நிகழ்ச்சி!' என்ற ONLINE இலவச வழிகாட்டல் நிகழ்ச்சியை நடத்துகின்றன. கலந்துகொள்பவர்களுக்கு, மதிப்பெண்கள் அடிப்படையில் ஒரு வருட இலவச பயிற்சிக்கான வாய்ப்பினை சாதிக் IAS அகாடமி வழங்கவிருப்பது இந்த வழிகாட்டல் நிகழ்ச்சியின் சிறப்பம்சங்களில் ஒன்று.

இந்த செய்தியையும் படிங்க...

FLASH NEWS- தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து - தமிழக அரசு.!!

CIVIL SERVICE தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் தங்கள் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள, LOCKDOWN காலத்தில் CIVIL SERVICE EXAM தயாராவது எப்படி, சிவில் சர்வீஸ் தேர்வு நுணுக்கங்கள், சிவில் சர்வீஸ் மாணவர்கள் செய்ய வேண்டியதும், செய்யக் கூடாததும், சிவில் சர்வீஸ் மாணவர்கள் பரீட்சைக்கான தயாரிப்பை எங்கு தொடங்க வேண்டும் - என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள், சந்தேகங்களுக்கு இந்தக் கருத்தரங்கு விடையளிக்கும்.

எம். சிவகுரு பிரபாகரன் IAS.,சார் ஆட்சியர், பத்மநாமபுரம், கன்னியாகுமர் மாவட்டம், கே. செந்தில் IRPFS, மூத்த மண்டல பாதுகாப்பு ஆணையர்/ RPF, சென்னை மண்டலம், தெற்கு ரயில்வே, எம்.ஏ.சாதிக், இயக்குநர், சாதிக் IAS., அகாடமி ஆகியோர் இந்த இணையவழி இலவச வழிகாட்டல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மாணவர்களுக்கு வழிகாட்டவிருக்கின்றனர்.

வழிகாட்டல் நிகழ்ச்சி ONLINE இலவச வழிகாட்டல் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முன்பதிவு அவசியம். முன்பதிவுக்கு: 72003 23450; 72004 23450

Post a Comment

0 Comments