"முழு ஊரடங்கிற்கு (FULL LOCKDOWN) முற்றுப்புள்ளி வைக்கும் வகையில்- மக்கள் நடந்து கொள்ள வேண்டும்":முதலமைச்சர்..!!
போலி மது, கள்ள மது தமிழ்நாட்டை சீரழித்துவிடக் கூடாது என்பதில் அரசு கவனமாக உள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியையும் படிங்க...
ஆட்குறைப்பு செய்யும் நிறுவனங்கள் மீது- உரிய நடவடிக்கை எடுக்கப்படும்..!!
இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோவில், CORONA கட்டுப்படுத்த மேலும் ஒரு வாரம் ஊரடங்கை(LOCKDOWN) நீட்டிக்க பொதுமக்களிடம் இருந்தே கோரிக்கை வந்தன; மக்களின் எண்ணங்களைத்தான் அரசு செயல்படுத்தி வருகிறது.
அரசு கட்டுப்பாடுகளை விதித்தாலும் மக்கள் அதை முழுமையாக பின்பற்றினால்தான் முழுமையான வெற்றி சாத்தியம்.தளர்வு அறிவித்ததற்கான உண்மையான நோக்கத்தை உணர்ந்து மக்கள் செயல்பட வேண்டும். மக்களின் ஒத்துழைப்பால் தமிழ்நாட்டில் CORONA தொற்று குறைந்துள்ளது; விதிமுறைகளை பின்பற்றி தொற்று குறைய உதவிய மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் TASMAC கடைகள் திறக்கப்பட்டுள்ளன. போலி மது ,கள்ள மது தமிழ்நாட்டை சீரழித்து விடக் கூடாது என்பதில் அரசு கவனமாக உள்ளது. TASMAC கடைகள் முழுமையான கட்டுப்பாடுகளை பின்பற்ற இயங்கும்.
CORONA கால கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்டால் எந்த நேரத்திலும் இந்த தளர்வுகள் திரும்ப பெறப்படும். முழு ஊரடங்கிற்கு (FULL LOCKDOWN) முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மக்கள் நடந்து கொள்ள வேண்டும்.
இந்த செய்தியையும் படிங்க...
8 மாவட்ட கலெக்டர்கள் உட்பட 20 IAS அதிகாரிகள் மாற்றம்: தலைமை செயலர் இறையன்பு ..!!
0 Comments