Join Our Whats app Group Click Below Image

ஜூலையில் DMK வெளியிடும் 'வெள்ளை அறிக்கை'-யில் என்னென்ன இடம்பெறும்..??

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

 ஜூலையில்  DMK வெளியிடும் 'வெள்ளை அறிக்கை'-யில் என்னென்ன இடம்பெறும்..??

DMK  எதிர்க்கட்சியாக இருந்தபோது, பல பிரச்னைகளில் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என AIADMK-வை வலியுறுத்தி வந்தது. தற்போது ஆட்சி பொறுப்பேற்றதும் தமிழகத்தின் நிதிநிலைமை குறித்து JULY  மாதத்தில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என தாமாக முன்வந்து அறிவித்துள்ளது. அதில் என்னவெல்லாம் இருக்கும் என பார்க்கலாம்.

இந்த செய்தியும் படிங்க... 

 8 வடிவ நடைபயிற்சியை- மேற்கொள்வதால் என்ன பலன்கள்..!!  

குறிப்பிட்ட பிரச்னை குறித்து முழுமையாக ஒளிவு மறைவு இன்றி வெளிப்படுத்தும் அரசாங்கத்தின் ஒரு ஆவணமே வெள்ளை அறிக்கை. இதில் புள்ளி விவரங்கள், பிரச்னைக்கான விளக்கத்தோடு இருக்கும். ஜூலை மாதம் தமிழ்நாடு அரசு வெளியிடவுள்ள வெள்ளை அறிக்கையில் மாநிலத்தின் கடன்சுமைக்கு என்ன காரணம் என விளக்கப்பட வாய்ப்புள்ளது.

அதாவது, 2014ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு தனது வருவாய் இலக்கை எட்டவில்லை. செலவீனங்கள் தொடர்ந்து அதிகரித்ததால், வருவாய் பற்றாக்குறையும் ஏற்படத்தொடங்கியது சுட்டிக்காட்டப்படலாம். வருவாய் இன்றி திட்டங்களை நிறைவேற்ற கடன்கள் வாங்கியதாலும், அந்த கடனுக்கு செலுத்த வேண்டிய வட்டியாலும் ஆண்டுதோறும் செலவீனம் அதிகரித்து, பற்றாக்குறை நீடிப்பதாக குறிப்பிடப்படலாம்.2011 ஆம் ஆண்டு ஒரு லட்சம் கோடியாக இருந்த கடன் சுமை 2020 - 21ஆம் நிதியாண்டில் 5 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டதற்கு இதையே காரணமாகவும் தெரிவிக்கலாம்.

மற்றொருபுறம் ஜி.எஸ்.டி. நடைமுறைப்படுத்திய பிறகு மதிப்புக்கூட்டு வரி மூலம் அரசுக்கு நேரடியாக கிடைத்து வந்த வருவாயை இழந்துவிட்டதாக விளக்கப்படலாம். தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் வெளிமாநிலங்களுக்கே அதிகம் விற்கப்படுவதால், நமக்கு கிடைக்கும் ஜி.எஸ்.டி. வருவாயும் மிக குறைவே. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை கூடும் நிதி குழுவும் தமிழ்நாட்டிற்கான வருவாய் பகிர்ந்தளிப்பு சதவீதத்தை குறைத்து வருகிறது.

இந்த செய்தியும் படிங்க... 

மன அழுத்தத்தை நீக்க- சிரிப்பு யோகா பயிற்சி..!! 

மதுக்கடைகள் வருவாய் மூலம் ஆண்டுக்கு 30 ஆயிரம் கோடியும், பெட்ரோல், டீசல் விற்பனையால் ஆண்டுக்கு 30 ஆயிரம் கோடியும் தமிழ்நாடு அரசின் பிரதான வருமானம். இவை எல்லாம் வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்படலாம்.



Post a Comment

0 Comments