Diploma:ரூ.27,500/- ஊதியம் பவர்கிரிட் ஆணையத்தில் வேலைவாய்ப்பு-2021..!!
பவர்கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (PGCIL) நிறுவனம் ஆனது அதன் காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய அறிவிப்பினை முன்னதாக வெளியிட்டு இருந்தது. அதில் Diploma Trainee பணிகளுக்கு என 35 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
வேலைவாய்ப்பு விவரங்கள் :
குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 27 வயது வரை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
தொழிற்கல்வி நிலையங்களில் EEE/ Power Systems/ Power Engineering ஆகிய பாடப்பிரிவுகளில் Diploma பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.27,500/- வரை சம்பளம் வழங்கப்படும். பதிவு செய்வோர் அனைவரும் Written Test/ Computer Based Test மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்
பொது விண்ணப்பதாரர்கள் ரூ.300/- மற்றும் SC/ ST/ PwD/ Ex-SM/ Departmental விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை :
திறமை உடையோர் வரும் 29.06.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள online இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Official PDF Notification – https://www.powergrid.in/sites/default/files/ADVERTISEMENT-SR-2-DIPLOMA-TRAINEE-2021.pdf
Apply Online – https://careers.powergrid.in/Sr2DtRecruitment2021/t/default.aspx
0 Comments