Join Our Whats app Group Click Below Image

தமிழ்நாட்டின் புதிய DGP: சைலேந்திர பாபு நியமனம்..!!

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

 தமிழ்நாட்டின் புதிய DGP: சைலேந்திர பாபு நியமனம்..!!

தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு காவல்துறை தலைவர் திரிபாதி நாளையுடன் ஓய்வு பெற உள்ள நிலையில் புதிய டிஜிபியாக சைலேந்திர பாபு நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

இந்த செய்தியின் படிங்க... 

கட்டணம் செலுத்தாத மாணவர்களின் கல்வியில் இடையூறு ஏற்படுத்தக் கூடாது-தமிழக அரசு..!!

ரயில்வே காவல்துறை தலைவராக தற்போது பணியாற்றி வரும் சைலேந்திர பாபு நாளை மறுநாள் பொறுப்பேற்க வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் 1962-ம் ஆண்டு ஜூன் 5-ம் தேதி பிறந்தவர். தமிழ்நாடு காவல்துறையின் 1987-ம் ஆண்டு பேட்ச் அதிகாரி ஆவார். மதுரை வேளாண் ஆராய்ச்சி கல்லூரியில் இளங்கலை படிப்பை முடித்து, பின் ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெற்றவர். கடலூர், காஞ்சிபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி இருக்கிறார். சென்னை அடையாறு துணை ஆணையர் உள்ளிட்ட உயர் பதவிகளிலும் திறம்பட பணியாற்றியவர் சைலேந்திர பாபு.

லஞ்ச ஒழிப்புத்துறை, சிறைத்துறை, தீயணைப்புத்துறை, கடலோர பாதுகாப்பு குழுமம் ஆகியவற்றிலும் பணியாற்றியவர். தீயணைப்பு துறையின் இயக்குனராக பொறுப்பு வகித்த போது, 2015-ம் ஆண்டு சென்னை பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் தீயணைப்பு துறை வீரர்களுடன் களமிறங்கி துணிச்சலுடன் மீட்பு பணியில் ஈடுபட்டார்.

இந்த செய்தியின் படிங்க... 

தேசிய அளவில் ஒரு திட்டம்:  ஜூலை 31க்குள் ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம்- உச்ச நீதிமன்றம் அதிரடி ..!!

"நீங்களும் ஐபிஎஸ் ஆகலாம்" என்ற சைலேந்திர பாபுவின் புத்தகம், இளையோரின் ஐபிஎஸ் கனவை தூண்டி கவனம் ஈர்த்தது. புத்தக வாசிப்பு, ஊக்குவிக்கும் வகையில் பேச்சு என இளைஞர்களை கவர்ந்தவர். காவல்துறையில் இவரது பணியை பாராட்டி, குடியரசு தலைவர் விருது, பிரதமர் விருது, தமிழ்நாடு முதலமைச்சர் விருது மற்றும் பதக்கங்களை பெற்றுள்ளார்.












Post a Comment

0 Comments