Join Our Whats app Group Click Below Image

Delta Plus Virus - "கவலைப்பட வேண்டிய வைரஸ்"..?? எப்படித் தப்பிப்பது..??

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

 Delta Plus Virus - "கவலைப்பட வேண்டிய வைரஸ்"..?? எப்படித் தப்பிப்பது..??

2021ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் ஏற்பட்ட கொரோனா வைரஸின் இரண்டாம் அலைக்குக் காரணமாக ஒரு வைரஸ் வேற்றுரு வல்லுநர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து நிறைய திரிபுகள் கண்டறியப்பட்டதால் கடந்த மே 31 அன்று உலக சுகாதார நிறுவனம் தமிழ்நாட்டில் திரிபான 'டெல்டா' என்று பெயரிட்டது.

இந்த செய்தியையும் படிங்க....

இந்தியாவில் 12 மாநிலங்களில் பரவியுள்ள DELTA PLUS வைரஸ்..!! 

சார்ஸ்-கோவ்-2 இன் அதிவேகமாகப் பரவும் தன்மைகொண்ட இந்த டெல்டா வேற்றுரு (variant) மேலும் திரிந்து (mutation), டெல்டா பிளஸ் வேற்றுருவானது.

இந்த டெல்டா பிளஸ் வைரஸானது, தென்னாப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட பீட்டா வகையின் (K417N) திரிபை தனது ஸ்பைக் புரதத்தில் கொண்டுள்ளதால் இரண்டு வைரஸ் திரிபுகளின் பண்புகளை ஒருசேர கொண்டு அமைந்துள்ளது.

ஸ்பைக் புரதம் என்றால் குழப்பிக் கொள்ள வேண்டாம். கொரோனா வைரஸின் வெளிப்புறச்சுற்றில் இருக்கும் முள்தோல்தான் அது. வெளிப்புறத்தில் பீட்டா திரிபையும், உட்புறத்தில் டெல்டா திரிபையும் கொண்டதால் இதை வேறுபடுத்திக் காட்ட டெல்டா பிளஸ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

"கவலைப்பட வேண்டிய வைரஸ்":

இதன் பரவல் வேகமும் அதிகம். தொற்று உறுதியானால் பாதிப்பின் அளவும் அதிகம் என்பதே இந்த Delta Plus Virus  திரிபை, "கவலைப்பட வேண்டிய வைரஸ்" என்று உறுதி செய்யவைத்துள்ளது.

எப்படியாகிலும், வைரசைப் புரிந்துகொள்வதை விட முக்கியமானது பாதுகாக்கும் வழிகளைத் தெரிந்துகொள்வதுதான்.

டெல்டா பிளஸ் வைரஸ் ஆபத்தானதுதான். எனினும் மக்கள் அச்சப்படத் தேவையில்லை. கவனமாயிருக்க வேண்டியது அவசியம். தற்போது குறைந்த எண்ணிக்கையில்தான் பாதிப்பு உள்ளது என்று தகவல்கள் வரும் நிலையில், முதல் உயிரிழப்பும் டெல்டா பிளஸ் வைரஸால் ஏப்ரல் 26ஆம் தேதி நிகழ்ந்தது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த செய்தியையும் படிங்க....

 முதல் டோஸ் கோவிஷீல்டு, இரண்டாவது டோஸ் கோவாக்சின் தடுப்பூசியை மாற்றிப் போட்டுக் கொண்டால் என்னவாகும்..??

இரண்டாம் அலைக்குக் காரணமான டெல்டா வேற்றுருவும் ஆரம்பத்தில் குறைந்த எண்ணிக்கையில்தான் இருந்தது. இரண்டரை மாதத்தில் அது அபரிமித வளர்ச்சியடைந்து நாட்டையே சூறையாடியது என்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டும். எனவே, அலட்சியம் வேண்டாம். எச்சரிக்கையாய் இருப்போம்.

எப்படித் தப்பிப்பது..??

தடுப்பூசி, முறையான ஈரடுக்கு முகக்கவசம், தொடர் சுகாதாரப் பழக்கங்கள், பாதுகாப்பான இடைவெளி ஆகியவற்றைப் பின்பற்றி பொதுமக்கள் தங்களைத் தாங்களே கவனமாக பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

Post a Comment

0 Comments