Join Our Whats app Group Click Below Image

டெல்டா (Delta) வகை கொரோனா: 2 டோஸ் தடுப்பூசிக்கு பிறகும் தாக்குகிறதா..!!

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

டெல்டா (Delta) வகை கொரோனா: 2 டோஸ் தடுப்பூசிக்கு பிறகும் தாக்குகிறதா..!! 

கொரோனாத் தொற்று உலகம் முழுவதும் பரவி தற்போது உருமாற்றமடைந்து முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் அலைகளாக பரவிவருகின்றன. முதல் அலையைவிட இரண்டாம் அலையின் தாக்கம் உலகம் முழுவதுமே அதிகமாக இருக்கிறது. உருமாற்றமடைந்த வைரஸுகளின் பரவும் வேகம் மற்றும் பாதிக்கும் தன்மையை வைத்து உலக சுகாதார நிறுவனம் அவற்றை

 ஆல்பா, 

பீட்டா, 

காமா மற்றும் 

டெல்டா 

என 4 வகைகளாகப் பிரித்தது. 

இந்த செய்தியின் படிங்க...

Delta Plus Virus - "கவலைப்பட வேண்டிய வைரஸ்"..?? எப்படித் தப்பிப்பது..??

அதில் இந்தியாவில் இரண்டாம் அலையில் அதிகளவில் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருப்பது டெல்டா வகைதான் என சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டால் இனி தொற்று நம்மை நெருங்காது என்பவர்களுக்கும், ஒருமுறை கொரோனா தொற்று ஏற்பட்டுவிட்டால் மீண்டும் வராது என்பவர்களுக்கும் அச்சத்தைக் கொடுக்கக்கூடியது இந்த வகை வைரஸ் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கும் டெல்டா பாதிப்பு:

மேற்குவங்கம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பாதிக்கப்பட்டவர்களில் 50%க்கும் அதிகமானோர் டெல்டா வைரஸால்தான் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், மேலும் தடுப்பூசி செலுத்தியும் கொரோனா தொற்று உறுதியானவர்களுக்கும் டெல்டா வகைதான் அதிகளவில் தாக்கியுள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். 

இதில் குறிப்பாக தடுப்பூசி செலுத்திய பிறகும் டெல்லியைச் சேர்ந்த 3 மருத்துவமனைகளைச் சேர்ந்த சுகாதாரப் பணியாளர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு டோஸ் தடுப்பூசிகளும் செலுத்தியவர்களுக்கு கொரோனா தொற்று தாக்கும் வாய்ப்புகள் மிகவும் அரிது என்றாலும், தடுப்பூசி செலுத்திய பலரும் டெல்டா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது கருத்தில் கொள்ளத்தக்கது என்கின்றனர் இந்தியா மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் பலர்.

மேலும் இந்த டெல்டா வகையானது மிக வேகமாக பரவக்கூடியது என்றும், நோயெதிர்ப்பு மண்டலத்தையும் விரைவில் தாக்கி ஊடுருவக்கூடியது என்றும், இதுதவிர கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தபிறகு உண்டாகியிருக்கும் நோயெதிர்ப்பு சக்தியையும் கூட 20 முதல் 55 சதவிகிதம் வரை அழிக்கக்கூடிய வலிமை படைத்தது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

இந்த செய்தியின் படிங்க...

 Delta Plus  அதிக அளவில் பரவக்கூடியது : WHO( டெட்ரோஸ் அதானோம்) எச்சரிக்கை..!!

மற்ற கொரோனா தடுப்பூசிகளுடன் ஒப்பிடுகையில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளால் உருவாக்கப்பட்ட ஆன்டிபாடிகளின் செயல்திறனானது டெல்டா வைரஸின்மீது சற்றுக் குறைவாகவே இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆனால், மீதமுள்ள உருமாற்றமடைந்த வகைகளின்மீது தடுப்பூசியின் செயல்பாடு நன்றாகவே இருப்பதாக ICMR தெரிவிக்கிறது. மேலும், தடுப்பூசியானது ஆன்டிபாடிகள் மேல் மட்டுமல்லாமல் நோயெதிர்ப்பு மண்டலத்தின் மற்ற செயல்பாடுகள்மீதும் நன்றாகவே வேலைசெய்வதாகக் கூறுகிறது.

மொத்த பாதிப்பில் 50%க்கும் அதிகமாக டெல்டா வகையின் தாக்கம்:

கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம், இந்திய தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம், ஜீனோமிக்ஸ் மற்றும் ஒருங்கிணைந்த உயிரியல் நிறுவனம், டெல்லி மருத்துவனைகள் இணைந்து நடத்திய புதிய ஆய்வானது கொரோனா இரண்டாம் அலையில் டெல்டா வைரஸின் தாக்கம் குறித்து மிகத்தெளிவான விளக்கத்தை அளிக்கிறது. மேலும் சில உயிரணு சோதனைகளில் டெல்டா வைரஸானது சுவாசப்பாதை செல்களை எவ்வாறு தாக்கி உடலில் வேகமாக பரவுகிறது என்பதையும் விளக்குகிறது.

இந்திய தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தின் இயக்குநர் சுஜீத் சிங் கூறுகையில், இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பரவத் தொடங்கிய டிசம்பர் 2020-இல் ஒரு மாவட்டத்தில் பரவிய டெல்டா வகை, மார்ச் 2021-இல் 52 மாவட்டங்களில் பரவியது. அதுவே ஜூன் மாதத்தில் 174 மாவட்டங்களில் பரவி பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதன்மூலம் டெல்டா வகையின் தீவிரத்தை நம்மால் உணரமுடியும் என்கிறார்.

குறிப்பாக ஆந்திரா, மேற்குவங்கம், டெல்லி, ஹரியானா, கேரளா, மகாராஷ்டிரா, பஞ்சாப் மற்றும் தெலங்கானா போன்ற எட்டு மாவட்டங்களில் எடுக்கப்பட்ட பரிசோதனைகளில் கண்டறியப்பட்ட உருமாற்றமடைந்த கொரோனா வைரஸுகளில் 50%க்கும் அதிகமானோரை இந்த டெல்டா வகை வைரஸ் தாக்கியிருப்பது தெரியவந்துள்ளது என சிங் கூறுகிறார். 

அதேசமயம், கொரோனாவில் பல்வேறு வகைகள் பரவினாலும் ஆரம்பத்தில் எடுக்கப்பட்ட பரிசோதனை, சிகிச்சை, கண்காணித்தல், மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியைக் கடைபிடித்தல் மற்றும் தடுப்பூசி போன்ற அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் முறையாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றன என்கிறார் அவர்.

தடுப்பூசியை சமரசம் செய்கிறதா டெல்டா?

டெல்டா வகை வைரஸை தடுப்பூசியின் செயல்திறன் சமரசம் செய்வதால் ஏற்கெனவே தடுப்பூசி செலுத்தப்பட்ட சுகாதாரப் பணியாளர்களிடையே பாதிப்பின் தாக்கம் குறைந்திருப்பதாக மற்றொரு இந்திய - பிரிட்டன் ஆராய்ச்சி கூறுகிறது. டெல்லியிலுள்ள ஒரு மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்தப்பட்ட 3,800 ஊழியர்களில் 30 பேரை மட்டுமே கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது எனவும், அவர்களை தாக்கியது டெல்டா வகை தான் எனவும் கண்டறியப்பட்டுள்ளது. 

அதேபோல் மற்ற இரண்டு மருத்துவமனைகளில் பாதிக்கப்பட்டவர்களிலும் டெல்டா வகை தான் அதிகம் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அந்த ஆராய்ச்சி கூறுகிறது. அதேசமயம் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்ட சுகாதாரப் பணியாளர்களை 10 குழுக்களாக பிரித்து கவனித்ததில் அவர்களில் தொற்று உறுதியானவர்களைத் தாக்கியது டெல்டாவகைதான் எனவும், ஆனால் அவர்களிடையே வைரஸின் தாக்கம் அதிகமாக இல்லை; அதாவது அவர்களுக்கு ஆக்சிஜன் உதவி மட்டுமே தேவைப்பட்டிருக்கிறது. ஆனால் வெண்டிலேஷன் உதவி தேவைப்படவில்லை எனவும் அந்த ஆராய்ச்சி முடிவில் தெரியவந்துள்ளது.

இந்த செய்தியின் படிங்க...

கொரோனா அதிர்ச்சி காரணமாக மனச்சோர்வு, உளவியல், தூக்கமின்மை அதிகரிப்பு..!!

அதேநேரத்தில், கொரோனா வைரஸானது மிகவேகமாக உருமாற்றமடைந்து வருவதால் அது நோயெதிர்ப்பு மண்டலத்தை எந்த வகையிலும் பாதிக்கும் எனவும், எனவே அதற்கேற்றாற்போல், தடுப்பூசியை மாற்றியமைக்க வேண்டும் எனவும் வேறு சில ஆய்வுகள் கூறுகின்றன. இதுகுறித்து ICMR  இயக்குநர் பல்ராம் பார்கவா கூறுகையில், தடுப்பூசி மாற்றியமைப்பது ஒரு வழிதான் என்றாலும், எதிர்காலத்தில் தேவைப்பட்டால் மட்டுமே மாற்றியமைக்கப்படும் என்கிறார்.

Post a Comment

0 Comments