ஜூலை மாதம் முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு DA வழங்கப்படுமா?- நிதியமைச்சகம் விளக்கம்..!!
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படியை மத்தியஅரசு கடந்த ஆண்டு மார்ச் மாதம் உயர்த்தியது. ஆனால், கரோனா பரவல் தீவிரமானதால் நாட்டின் பொருளாதாரம் கடுமையான பாதிப்பை சந்தித்தது.
இந்த செய்தியையும் படிங்க...
வங்கி சேமிப்பு கணக்கு: தொடங்கும் போது -அறிந்து கொள்ள வேண்டியவை..!!
எனவே மத்திய அரசு ஊழியர் களுக்கான அகவிலைப்படியும் (DA), ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி நிவாரணமும் (DR) ஜூலை 2021 வரை நிறுத்தி வைக்கப்படுவதாக கடந்த ஆண்டு அரசு அறிவித்தது.
இதற்கிடையில், ஜூலை மாதம் முதல் மீண்டும் DA,DR வழங்கப்படுகிறது என்று சமூக வலை தளங்களில் வதந்திகள் பரவின. இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் நேற்று அளித்த விளக்கத்தில், 'மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி குறித்து எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. இதுதொடர்பான பொய் தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. உயர்த்தப்பட்ட அகவிலைப்படியை வழங்குவது குறித்து அரசு முடிவு செய்யும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments