Join Our Whats app Group Click Below Image

"CORONA நிவாரண நிதிக்கு ஆசிரியர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்துகொள்ளலாம்"..!!

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

 "CORONA நிவாரண நிதிக்கு ஆசிரியர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்துகொள்ளலாம்"..!!

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் JUNE மாத ஊதியத்திலும் ஒருநாள் சம்பளத்தை பிடித்தம் செய்துகொள்ளலாம் என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுதொடர்பாக கூட்டமைப்பின் நிறுவனர் அருணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் கொரோனா கொடுந்தொற்று கட்டுக்குள் கொண்டு வர உழைத்துவரும் தமிழக முதல்வரை எங்கள் கூட்டமைப்பு பாராட்டுகிறது. முதல்வர் நிவாரண நிதிக்கு அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் ஒருநாள் ஊதியத்தை பிடித்தம் செய்ய கேட்டுக்கொண்டோம் அதையேற்று MAY மாத ஊதியத்தில் இருந்து ஒருநாள் ஊதியத்தை பிடித்தம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்த செய்தியையும் படிங்க...

 வீடுகளுக்கான துல்லியமான மின்கட்டணத்தை கணக்கிட்டு செலுத்துவது எப்படி?... மின்வாரியத்துறை விளக்கம்..!! 

மேலும் தொடர்ந்து CORONA பணிக்கு நிதி தேவைப்படுவதை அறிகிறோம். ஆதலால் முன்கள பணியாளர்களை தவிர்த்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் JUNE மாத ஊதியத்தில் இருந்து ஒருநாள் ஊதியத்தை பிடித்தம் செய்து முதல்வரின் நிவாரண நிதிக்கு பயன்படுத்திக்கொள்ளுமாறு வேண்டுகிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Post a Comment

0 Comments