Join Our Whats app Group Click Below Image

அரசு ஆசிரியர்களை CORONA தடுப்பூசி போடும் பணியில் ஈடுபடுத்தலாம்; மருத்துவர்கள், சமூக ஆர்வலர்கள் ஆலோசனை..!!

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

 அரசு ஆசிரியர்களை CORONA  தடுப்பூசி போடும்  பணியில் ஈடுபடுத்தலாம்;  மருத்துவர்கள், சமூக ஆர்வலர்கள் ஆலோசனை..!!

CORONA  தடுப்பூசி போடுவதை முறைப்படுத்த வேண்டும். மையங்களில் பொதுமக்கள் கூடுவதால் தொற்று பரவல் ஏற்பட வாய்ப்புள்ளது என்று மருத்துவர்கள், சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

 இந்தச் செய்தியையும் படிங்க...

பள்ளிகள் இப்போதைக்கு திறக்கப்படாது: அமைச்சர் ..!!  

தமிழகத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் CORONA தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. CORONA  2-வது அலை தீவிரமானதால், தடுப்பூசி போட்டுக் கொள்ள வருபவோர் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனால், தடுப்பூசிக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மையங்களில் தினமும் 200 அல்லது 300 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டு டோக்கன் தரப்படுகிறது.

இந்த டோக்கனை பெறுவதற்காக அதிகாலை முதலே மையங்களில் மக்கள் காத்திருக்கின்றனர். டோக்கன் விநியோகிக்கும் நேரத்தில் தள்ளு முள்ளு ஏற்படுகிறது. சிறிதும் சமூக இடைவெளியின்றி ஒருவரை ஒருவர் தள்ளிக் கொண்டு டோக்கனை பெற முயற்சிக்கின்றனர். பலர் கீழே விழும் நிலையும் ஏற்படுகிறது. டோக்கன் கிடைக்காதவர்கள் மையங்களிலேயே காத்திருக்கின்றனர். இதன்மூலம் தடுப்பூசிபோட்டுக் கொள்ள வருபவர்களுக்கு கரோனா தொற்று ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

இதுதொடர்பாக மருத்துவர்கள், சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: 

CORONA தொற்றால் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பது எவ்வளவு முக்கியமோ, தொற்று பரவலை தடுப்பதில் கவனம் செலுத்துவதிலும் அதே அளவு கவனம் செலுத்துவது அவசியம். ஆனால், தடுப்பூசி மையங்கள் தொற்று பரவல் இடமாக மாறி வருகிறது.

ஒவ்வொரு மையத்திலும் மக்கள் கூட்டம் அதிகமாகவுள்ளது. முகக்கவசம் அணிந்திருந்தாலும், சமூக இடைவெளியை கடைபிடிப்பதில்லை. தடுப்பூசி போடுவதை முறைப்படுத்த வேண்டும். ஆரம்பத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்ள www.CoWin.gov.in/home என்ற இணையதளத்தில் பதிவு செய்யவேண்டும் என அறிவிக்கப்பட்டது. அதனை பின்பற்றாமல், பதிவு செய்யாமல் வருபவர்களுக்கும், மையத்தில் பதிவு செய்து தடுப்பூசி போடப்படுகிறது. இதுதான் மையங்களில் பொதுமக்கள் அதிக அளவில் கூடுவதற்கு முக்கிய காரணம்.

இணையதளத்தில் பதிவு செய்து வருவதை தீவிரமாக நடைமுறைபடுத்த வேண்டும். பொதுமக்களில் பலருக்கு இணையதளத்தில் பதிவு செய்யதெரியாது. அதனால், கிராம நிர்வாக அதிகாரி, கிராமப்புற செவிலியர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகளை பணியில் ஈடுபடுத்தலாம். 

 இந்தச் செய்தியையும் படிங்க...

 மக்களின் நலன் கருதி CORONA கட்டுப்பாடுகளை தொடர வேண்டும்: உயர் நீதிமன்றம்..!!  

தமிழகத்தில் அரசு பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால், ஆசிரியர்களை பணியில் ஈடுபடுத்தினால் விரைவாக பதிவு செய்ய முடியும். அப்படி இல்லையென்றால், தடுப்பூசிக்காக ஒரு செல்போன் எண்ணை அறிவித்து, தடுப்பூசி போட்டுக் கொள்ள இருப்பவர்களின் ஆதார் எண் மற்றும் அஞ்சல் குறியீடு எண்ணை குறுஞ்செய்தியாக பெறலாம். 

அதன்படி, பதிவுசெய்து முன்னுரிமை அடிப்படையில் அருகில் உள்ள மையத்தில் குறிப்பிட்ட தேதியில், நேரத்தில் சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று Message  அனுப்பலாம். இதுவும் முடியாது என்றால்,மையங்களில் தடுப்பூசிக்கான டோக்கனை விநியோகிப்பதற்கு பதிலாக, குறிப்பிட்ட தேதி, நேரத்தில் வந்து தடுப்பூசி போட்டுக் கொள்ளும்படி ஆசிரியர்கள் மூலம் வீடுகளுக்கே சென்று டோக்கனை விநியோகிக்கலாம்.

இதன்மூலம், மையங்களில் அதிகஅளவில் பொதுமக்கள் கூடுவதுதடுக்கப்படுவதுடன், CORONA  தொற்று பரவலும் தடுக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

பற்றாக்குறை தான் காரணம்:

பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறியது:

CORONA தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு பொதுமக்களிடம் அதிக அளவில் ஏற்பட்டுள்ளது. இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை தடுப்பூசி போட்டுக் கொள்ள ஆர்வமாக வருகின்றனர். தடுப்பூசி பற்றாக்குறை இருப்பதால், விரைவாக அனைவருக்கும் போடமுடியவில்லை. இதுதான் முக்கிய பிரச்சினை. தேவையான அளவு தடுப்பூசி கிடைத்துவிட்டால் எந்த பிரச்சினையும் இருக்காது.

 இன்னும் கூடுதல் மையங்களை அமைத்து 24 மணி நேரமும் தடுப்பூசியை போடலாம். எப்போது மையங்களுக்கு சென்றாலும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்ற நிலை உருவாகும். பொதுமக்களின் கூட்டமும் இருக்காது. தடுப்பூசி குறைவாக வருவதால், முதலில் சென்று போட்டுக் கொள்ள வேண்டும் என நினைத்து மக்கள் குவிந்து விடுகின்றனர். ஆனாலும் டோக்கன் விநியோகித்து தான் தடுப்பூசி போடப்படுகிறது.

தடுப்பூசிக்கு இணையதளத்தில் பதிவு செய்வது கட்டாய மாக்கினால் எழுத படிக்க தெரியாதவர்கள், கிராமங்களில் வசிப்பவர்களும் பாதிக்கப்படுவார்கள். அதனால் தான், பதிவு செய்து வருபவர்களுக்கும், பதிவு செய்யாமல் வருபவர்களுக்கு மையங்களில் பதிவு செய்தும் தடுப்பூசி போடப்படுகிறது. 

 இந்தச் செய்தியையும் படிங்க...

 1 to Plus Twoவகுப்பு வரை:பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு..!!  

மத்திய அரசிடம் இருந்து இதுவரை சுமார் 1.16 கோடி தடுப்பூசிகள் வந்துள்ளன. இதில், 1 கோடியே 8 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 5 கோடியாக இருக்கும். மாதத்துக்கு 1 கோடி தடுப்பூசிகள் கிடைத்தால், 5 மாதத்தில் அனைவருக்கும் தடுப்பூசியை போட்டுவிடலாம். அதற்கான கட்டமைப்பு நம்மிடம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Post a Comment

1 Comments

  1. பதிவு செய்தவர் அல்லது விருப்பமுள்ளவர்கள் வீடுகளுக்கு சென்று செவிலியர்கள் ஊசி போட்டு விட்டு வரலாம்.இதனால் மக்கள் ஓரிடத்தில் கூடுதல் தவிர்க்க முடியும்

    ReplyDelete