Join Our Whats app Group Click Below Image

CORONA: காணாமல் போக செய்யும்- முன்னெச்சரிக்கை முறைகள்..!!

Welcome to Our Tamil Crowd Website...

 CORONA: காணாமல் போக செய்யும்- முன்னெச்சரிக்கை முறைகள்..!!

கடந்த ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் இந்தியாவில் CORONA வைரஸ் பரவ தொடங்கியது. இதில் ஒரு கோடி பேருக்கு மேல் பாதிக்கப்பட்டனர். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இறந்து போனார்கள். தற்போது CORONA வைரஸ் 2-வது அலை இந்தியாவில் அதிவேகமாக பரவி வருகிறது. தற்போது கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

இந்த செய்தியையும் படிங்க...

DO YOU KNOW WHY BACK PAIN( முதுகு வலி) OCCURS..??  

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:

CORONA நோயாளிக்கு சுவாசிக்க ஆக்சிசன்(OXYGEN) உதவி தேவைப்படுகிறது. ஆனால், நோய்த்தொற்று பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க முடியும். 

  • நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க, வீட்டின் சுற்றுப்புறத்தில் வேப்பிலை, மஞ்சள் கலந்த நீர் தெளிக்க வேண்டும்.
  •  தினமும் காலையில் மிதமான சூட்டில் கல் உப்பால் வாய் கொப்பளிக்க வேண்டும்.
  • தொண்டை வறண்டு போகாமல் இருக்க 2 வேளை வெந்நீர் குடிக்க வேண்டும்.
  •  வேப்பிலை, நொச்சி இலை மற்றும் மஞ்சள் சேர்த்து தினமும் சுவாசத்துக்கான நீராவி பிடிக்க வேண்டும்.
  •  மஞ்சள், வேப்பிலை, கற்றாழை மற்றும் படிகாரம் கலந்த நீரை கைகழுவ பயன்படுத்தலாம். 
  • காலையில் தோல் சீவிய இஞ்சி, எலுமிச்சை தோலுடன் மிளகு சேர்த்து காய்ச்சி தேன் கலந்து குடிக்க வேண்டும்.
  • தினமும் மாலை சுக்கு, கொத்தமல்லி கலந்த பானம் தேனில் கலந்து அருந்த வேண்டும். 
  • இரவில் சூடான பாலில் மஞ்சள், மிளகு சேர்த்து குடிக்க வேண்டும்.
  •  சுண்டைக்காய், பாகற்காய், திணை, சாமை, கேழ்வரகு, குதிரைவாலி, வேப்பம் பூ, தூதுவளை ரசம் ஆகிய உணவுகளை சாப்பிட வேண்டும். 
  • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நெல்லிக்காய், கொய்யாப்பழம், பப்பாளி, ஆரஞ்சு, சாத்துக்குடி உள்ளிட்ட பழங்களை தினமும் சாப்பிட வேண்டும்.
  • அலர்ஜி, ஆஸ்துமா, சைனஸ் நோயாளிகள், வயதானவர்கள் முள்ளங்கி, சுரைக்காய், பூசணி, வெள்ளரிக்காய் ஆகியவற்றையும், எலுமிச்சை, தயிர், மாதுளை, திராட்சை போன்ற உணவு வகைகளை தவிர்க்க வேண்டும்.
  •  கொண்டைக்கடலை, பாதாம்பருப்பு, நிலக்கடலை ஆகியவற்றை சுண்டல் செய்து சாப்பிடலாம். தினமும் காலை 10 மணிக்குள்ளும், மாலை 4 மணிக்கு பிறகும் உடம்பில் வெயில்படுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
  • இதன் மூலம் நோய்த்தொற்று பரவாமல் நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ள முடியும். 
  •  மிதமான மற்றும் சாதாரண பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு சித்த மருந்துகள் மட்டும் நோய்த்தொற்றை குணப்படுத்த போதுமானது. பிற பிரிவினருக்கு ஆங்கில மருந்துகளுடன், சித்த மருத்துவமும் சேர்ந்து கிடைக்கும் போது விரைவில் குணமடைகின்றனர்.

நீராவி பிடிக்கும் வழிமுறைகள்:

  • காலை, மாலை நேரங்களில் தொடர்ந்து சுவாசத்துக்கான நீராவி பிடித்தால் CORONA வைரஸ் தொற்று பாதிப்பில் இருந்து நிவாரணம் பெற முடியும். 
  • இதற்கு கல் உப்பு, விரலி மஞ்சள்தூள், வேப்பிலை, நொச்சி இலை, துளசி இலை மற்றும் ஓமவள்ளி இலை ஆகியவற்றை சுத்தமான தண்ணீரில் நன்றாக கொதிக்க வைத்து வாய் மற்றும் மூக்கு பகுதியில் நீராவி படும்வகையில் 3 நிமிடம் ஆவி பிடிக்க வேண்டும். 
  • அப்போது, காற்றை இழுத்து சுவாசிக்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது, அவ்வப்போது தொற்றிக்கொள்ளும் வைரஸ் கிருமிகள் அழிக்கப்படும்.

Post a Comment

0 Comments