Join Our Whats app Group Click Below Image

புற்றுநோய் (CANCER) உயிரணுக்கள்: எப்படி கட்டுப்படுத்தலாம் ..??

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

 புற்றுநோய் (CANCER) உயிரணுக்கள்: எப்படி கட்டுப்படுத்தலாம் ..??

சிகிச்சையற்ற நிலையில் புற்றுநோய் உயிரணுக்கள் கட்டுப்பாடின்றி வளர்கின்றன. அவை சுற்றியுள்ள மற்ற திசுக்களை ஆக்கிரமித்து அழிக்கின்றன. ரத்தம் மற்றும் நிணநீர் வழியாக உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவுகின்றன. இதனால், உறுப்பின் இயக்கங்கள் பாதிக்கப்பட்டு இறப்பு ஏற்படுகிறது.

புற்றுநோய் ஒரு தொற்றுநோய் அல்ல. ஆண்களுக்கு நுரையீரல், வயிறு, குடல், உணவுக்குழாய், ப்ராஸ்ட்ரேட் சுரப்பிகளிலும், பெண்களுக்கு மார்பகம், நுரையீரல், வயிறு, குடல், கர்ப்பப்பை வாய் ஆகியவற்றிலும் அதிகமாக புற்றுநோய் வருகிறது. புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்த செய்தியின் படிங்க...

தர்ப்பூசணி பழ விதையில் உள்ள நன்மைகள்..!!

ஒருவர் வயிற்று புற்றுநோயால் அவதிப்படும் போது , மற்றொருவர் குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பார். எனினும், உலகளவில் பார்க்கும் போது இவற்றிற்கான காரணங்கள் ஒன்றாகவே உள்ளன. இந்த காரணங்களை கட்டுப்படுத்தும் வகைகளை அறிந்து கொண்டு நோயற்ற, ஆரோக்கியமான வாழ்க்கையை நம்மால் வாழ முடியும். 

1. எடையைக் கட்டுப்படுத்துதல்

அளவுக்கு அதிகமான எடையை கொண்டிருப்பதை யாரும் மகிழ்ச்சியுடன் அனுபவிப்பதில்லை. இது உங்களை தொந்தரவு செய்வதுடன், கட்டுப்படுத்த இயலாதவராகவும் வைத்துள்ளது. உங்களுடைய எடையை கட்டுப்பாட்டுக்குள் வைத்து, ஆரோக்கியமான எடையை பராமரித்து வந்தால், புற்றுநோயால் தாக்கப்படும் அபாயத்தை பெருமளவு தவிர்க்க முடியும்.

2. ஆல்கஹால்

"குடி குடியைக் கெடுக்கும். உடல் நலத்திற்கும் உலை வைக்கும்". மதுப்பழக்கம் புற்றுநோய் வருவதற்கும் மிகவும் முக்கியமான காரணமாக உள்ளது. எனவே, மதுவை பெருமளவு விலக்குவது புற்றுநோய் ஆபத்திலிருந்து உங்களையும் விலக்கி வைக்கும்.

3. உப்பு

சாப்பிடும் உணவில் உப்பின் அளவை கட்டுப்படுத்தி வைப்பதன் மூலம் புற்றுநோயையும் கட்டுப்படுத்த முடியும். ஒவ்வொரு நாளும் சாப்பிடும் உணவில் உள்ள உப்பு இரத்த அழுத்தத்தை அதிகரிப்பதுடன், வயிற்று புற்றுநோயையும் வர வைக்கும்.

இந்த செய்தியின் படிங்க...

வெந்தயம் ஊற வைத்த நீரை அருந்தி வருவதால் கிடைக்கும் பலன்கள்..!!

4. கதிர்வீச்சு

புற்றுநோயை உருவாக்கும் காரணங்களில் ஒன்றாக கதிர்வீச்சு உள்ளது. தினமும் பல்வேறு காரணங்களுக்காக நாம் கதிர்வீச்சுகளால் தாக்கப்படுகிறோம், இதில் முதன்மையானது சூரியனிடம் இருந்து வரும் புறஊதாக் கதிர்களாகும். எனவே, தேவையற்ற வகையில் கதிர்வீச்சுகளை எதிர் கொள்வதையும்,இயற்கைக்கு மாறான முறைகளில் கதிர்வீச்சுகளை எதிர் கொள்வதையும் தவிர்க்கவும்.

5. தொற்றுகள்:

ஹியூமன் பாபிலோமாவைரஸ் என்ற வைரஸ் பலருக்கும் புற்றுநோய் கதவை திறந்து விடும் கருவியாக உள்ளது. இந்த வைரஸால் தாக்கப்பட்டவர்கள், ஹெலிகோபேக்டர் பைரோலி என்ற அடுத்த நிலைக்கு சென்று விடுவார்கள். இந்த வைரஸால் தாக்கப்பட்டவர்கள் உடனடியாக மாற்று மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

6. பதப்படுத்தப்பட்ட இறைச்சி

உப்பிட்ட பன்றியின் தொடை, பன்றி இறைச்சி, சாசேஜ்கள் மற்றும் வெள்ளை பூண்டு மணம் கொண்ட இத்தாலிய உணவு வகைகள் ஆகியவை புற்றுநோய் காரணங்களை அதிகரிக்கும் திறன் கொண்டவையாகும். இது புற்றுநோயை அதிகபடுத்தும் காரணங்களில் ஒன்றாகும்.

7. பணி நிலை

புற்றுநோய்க்கு முதன்மை காரணமாக இருக்கும் பணியிடங்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதார குறைபாடுகளை நாம் குறைவாக மதிப்பிடக் கூடாது. பணியிடங்களில் இருக்கும் பல்வேறு விதமான இரசாயனங்கள் காரணமாகவும் புற்றுநோய் தூண்டப்படும்.

8. புகையிலை

புற்றுநோயை வர வைக்கும் குணம் கொண்ட புகையிலையை சாப்பிடுவது உடலுக்கு எப்பொழுதும் நல்லதல்ல. புகை பிடிப்பவர்கள் அவற்றை உள்ளிழுப்பதை குறைக்க வேண்டும் மற்றும் பிற வடிவங்களில் புகையிலையை மெல்லுபவர்களும் அவற்றை குறைக்க வேண்டும். இதன் மூலமே புற்றுநோயை குறைக்க முடியும்.

9. நார்ச்சத்துக்கள்

நம்முடைய உணவு முறையை நாகரீகமாக மாற்றியுள்ளதும் புற்றுநோயை வரவழைக்கும் காரணங்களில் ஒன்றாக உள்ளது. குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் செரிமாண உறுப்புகள் பாதிக்கப்படும். எனினும், கோதுமை மற்றும் நார்ச்சத்து நிரம்பிய உணவுகளை சாப்பிடுவதன் மூலம் இந்த அபாயங்களை குறைக்க முடியும்.

இந்த செய்தியின் படிங்க...

Delta Plus Virus - "கவலைப்பட வேண்டிய வைரஸ்"..?? எப்படித் தப்பிப்பது..??

 சப்தமில்லாமல் நம் உடலில் உருவாகி, கொஞ்சம் கொஞ்சமாக நம்மை இறப்பின் வாயிலுக்கு அழைத்துச் செல்லும் நோய்களுள் புற்று நோயும் ஒன்று. இது வந்துவிட்டாலே இறப்பு உறுதிதான் என்ற நிலை மாறி, அதற்கான சிகிச்சைமுறைகள் வந்துவிட்டாலும், மக்களிடம் பயமும் பாதிப்பும் அதிகம்தான்.


Post a Comment

0 Comments