Join Our Whats app Group Click Below Image

ஆபத்து, கண் திருஷ்டி, துஷ்ட சக்தி-அகல சொல்ல வேண்டிய மந்திரம்..!!

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

 ஆபத்து, கண் திருஷ்டி, துஷ்ட சக்தி-அகல சொல்ல வேண்டிய மந்திரம்..!!

நம்முடைய வெற்றியை, முன்னேற்றத்தைக் காண சகிக்காமல் சிலர் கண்திருஷ்டி வைப்பபார்கள். நமக்கு எதிராக துஷ்ட சக்தியைத் தூண்டிவிடுவார்கள். இது போன்ற பாதிப்புகள் நம்மை நெருங்காமல் இருக்க பின்வரும் மந்திரத்தை சொல்லி வரலாம்.

மந்திரம்:

ரக்த ஜ்வால ஜடாதரம் ஸுவிமலம் ரக்தாங்க தேஜோமயம்

த்ருத்வா சூல கபால பாச டமருத் லோகஸ்ய ரக்ஷாகரம்

நிர்வாணம் கந வாஹனம் த்ரிநயனம் ஆனந்த கோலாஹலம்

வந்தே ஸர்வ பிசாசநாத வடுகம் க்ஷேத்ரஸ்ய பாலம் சிவம்.

பொருள்:

சிவந்த முடியும் ஒளி மிகுந்த தேகமும் கொண்ட பைரவரே, வணக்கம். சூலம், கபாலம், உடுக்கை ஆகியன தரித்து உலகத்தைக் காப்பவரே, நன்றியின் வடிவமான நாயை வாகனமாகக் கொண்டவரே, வணக்கம். முக்கண்கள் கொண்டவரே, ஆனந்த வடிவனரே, பூத, பிரேத, பிசாசுக் கூட்டங்களைக் கட்டுப்படுத்துபவரே, அனைத்துப் புண்ணிய தலங்களையும் காப்பவரே பைரவரே வணக்கம்!

இந்த செய்தியும் படிங்க...

 ஜலதோஷம், இருமலை நீக்க - மூலிகை டீ தயாரிப்பது எப்படி..??  

இந்த ஸ்லோகத்தை மனப்பாடம் செய்து, தேய்பிறை அஷ்டமி தினத்தன்று பைரவரை வணங்கி சொல்ல வேண்டும். நம்மைப் பிடித்த அனைத்து வகையான ஆபத்துக்களும், கண் திருஷ்டிகளும் அகலும். மேலும் எந்த ஒரு துஷ்ட சக்தியும் நம்மை நெருங்காது.

கண் திருஷ்டி, துஷ்ட சக்தி நம்மை நெருங்காமல் இருக்க பௌர்ணமி தினத்தில் பூசனிக்காயைக் கட்டி வீட்டின் முன் தொங்க விடலாம். அதே போல் வெள்ளிக் கிழமை காலை 9 மணிக்குள் கற்றாழை செடியை வீட்டுக்கு முன்பு கட்டி தொங்க விடலாம்.


Post a Comment

0 Comments