அல்சர், சளி, நீரிழிவு, முடி உதிர்வு, பொடுகு போன்ற பிரச்சினைகளை போக்க..!!
சோற்றுக் கற்றாழையின் நடுவில் இருக்கும் வெள்ளைப்பகுதியை எடுத்து மோர் உடன் கலந்து தினமும் குடித்து வந்தால் அல்சர் குணமடையும். அதோடு உடலும் இளமைத்துடிப்புடன் இருக்கும்.
ஏழைகளின் ஆப்பிள் என்று சொல்லக்கூடிய நெல்லிக்கனியை தினமும் சாப்பிட்டால் நாள்பட்ட தோல் நோய் பிரச்சினைகள் எல்லாம் குணமாகும். அது மட்டுமில்லாமல் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து முகம் பொலிவுடன் காணப்படும்.
நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த, வெந்தயத்தை அரைத்து, தினமும் ஒரு ஸ்பூன் சூடான நீரில் கலந்து குடித்து வரலாம். அதோடு தினமும் சிறியாநங்கை மற்றும் பெரியாநங்கை மூலிகைச் சாற்றையும் பயன்படுத்தி வர நல்ல பலன் கிடைக்கும்.
சிவப்பு நிற செம்பருத்திப் பூவை உலர்த்தி பொடி செய்து, சீயக்காய் போல உச்சந்தலையில் நன்கு படும்படி தேய்த்து குளித்து வர பொடுகு தொல்லையிலிருந்து விடுபடலாம். செம்பருத்தியை அரைத்து தேய்ப்பதால் முடி நன்றாக வளரும், முடி உதிர்தல் குறையும், கண்களும் உடலும் குளிர்ச்சியாக இருக்கும்.
குப்பை மேனி கீரையில் இருந்து சாறு பிழிந்து கொடுத்தால், இருமல் மற்றும் தும்மல், மூச்சுவிடக்கூட சிரமப்படும் குழந்தைகளுக்கு கொடுத்தலை சளித் தொல்லை குணமாகிவிடும். குப்பை மேனி சாற்றை சரியான அளவில் கொடுக்கவில்லை என்றால் வயிற்றுப்போக்கு ஏற்படும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
0 Comments