Join Our Whats app Group Click Below Image

டெல்டா ரக அபாயம்; இந்திய ஒலிம்பிக் வீரர்களுக்கு அதிக கட்டுப்பாடுகள்-ஜப்பான் பிரதமர் ..!!

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

 டெல்டா ரக அபாயம்; இந்திய ஒலிம்பிக் வீரர்களுக்கு அதிக கட்டுப்பாடுகள்-ஜப்பான் பிரதமர் ..!!

2020ஆம் ஆண்டு நடைபெறவேண்டிய ஒலிம்பிக் போட்டி கொரோனா வைரஸ் முதல் அலையின் தாக்கம் காரணமாக இந்த ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறுகிறது.ஜப்பானில் வைரஸ் தாக்கம் அதிகரித்ததன் காரணமாக ஒலிம்பிக் போட்டியை நடத்தலாமா? வேண்டாமா? என்று நீண்ட இழுபறி நீடித்து வந்த நிலையில் ஒருவழியாக இதற்கு முடிவு எட்டப்பட்டது. 

இந்த செய்தியையும் படிங்க... 


 வரும் ஜூலை 23ஆம் தேதி தொடங்கி நான்கு நாட்கள் ஒலிம்பிக் போட்டிகளை டோக்கியோவில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளன.பல்வேறு நாடுகளில் இருந்து நூற்றுக்கணக்கான வீரர்கள் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ள டோக்கியோவுக்கு வருகை தர உள்ளனர். இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.ஜப்பான் பிரதமர் யோசிஹிடே சுகா விளையாட்டு வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்துள்ளார்.

 பல்வேறு நாடுகளிலிருந்து அவர்கள் டோக்கியோவுக்கு கிளம்பும் முன்னரே அவர்களது நாட்டில் இரண்டு முறை வைரஸ் பரிசோதனை செய்து சான்றிதழை ஜப்பான் அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.தற்போது இந்தியா உட்பட கிழக்காசிய நாடுகளில் டெல்டா ரக கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக உள்ளது. ஆகவே மற்ற நாட்டு ஒலிம்பிக் வீரர்களைக் காட்டிலும் இந்திய வீரர்களுக்கு அதிகளவு சோதனை மேற்கொள்ள ஜப்பான் அரசு வலியுறுத்தியுள்ளது.

இந்த செய்தியையும் படிங்க... 

Delta Plus Virus - "கவலைப்பட வேண்டிய வைரஸ்"..?? எப்படித் தப்பிப்பது..??

பரிசோதனை டோக்கியோவுக்கு கிளம்பும் முன்னர் ஏழு நாட்களுக்கு இந்திய வீரர்களுக்கு தாங்கள் வசிக்கும் இடத்திலேயே கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளவேண்டும். ஏழாவது நாள் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இல்லை என உறுதி அளிக்கப்பட்ட பின்னரே இந்திய வீரர்கள் டோக்கியோவுக்கு விமானம் ஏற வேண்டும் என ஜப்பான் அரசு கட்டாயமாகத் தெரிவித்துள்ளது. இந்திய ரக வைரஸ் மற்ற நாட்டு வைரஸ் ரகங்களைக் காட்டிலும் மிகவும் ஆபத்தானது என்பதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments