கருப்பு மிளகு - நன்மைகள் என்னென்ன..??
இந்த செய்தியும் படிங்க...
உடல் எடையை குறைக்க - எளிய வழிமுறைகள் !!
நீங்கள் விரைவாக உடல் எடையை குறைக்க விரும்பும் உடற்பயிற்சி ஆர்வலராக இருந்தால், உங்கள் தினசரி உணவில் கருப்பு மிளகு சேர்த்துக்கொள்ள வேண்டும். எலுமிச்சை சாறு மற்றும் ராகி ஆகியவற்றையும் உங்கள் உணவாக எடுத்துக்கொண்டால் எடையிழப்புக்கு உதவியாக இருக்கும். இந்த உணவுகள் அனைத்தும் விரைவாக உடல் எடையை குறைக்க உதவும் மற்றும் கருப்பு மிளகு உங்கள் குடலையும் வயிற்றையும் சுத்தப்படுத்தும். கருப்பு மிளகு நமக்கு வழங்கும் சில முக்கியமான நன்மைகளை பற்றி பார்க்கலாம்:
- உடல் எடையை குறைக்க உதவுகிறது
- உடலில் உள்ள நச்சுக்களை நீக்குகிறது
- புற்றுநோயைத் தடுக்கிறது
- குடல் மற்றும் வயிற்றை சுத்தப்படுத்துகிறது
- இதயத் துடிப்பு மற்றும் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும் POTASSIUM சத்தைக் கொண்டுள்ளது
- சிவப்பு ரத்த அணுக்களை (RBC) உருவாக்க உதவுகிறது
- வைட்டமின் B(VITAMIN B) மற்றும் CALCIUM இதில் நிறைந்துள்ளது
- மலச்சிக்கல் பிரச்சினையை போக்க வல்லது
- தோல் சிதைவு மற்றும் சுருக்கங்களைத் தடுக்கும் திறன் கொண்டது.
இவ்வளவு நன்மைகள் கொண்ட கருப்பு மிளகை உங்கள் தினசரி உணவில் ஒரு சிட்டிகை சேர்ப்பது உங்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும். உடலைக் கட்டுக்கோப்புடன் வைத்துக்கொண்டு ரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகளில் இருந்து விடுபட கருப்பு மிளகு அவசியமான ஒன்று.
0 Comments