Join Our Whats app Group Click Below Image

வீடுகளுக்கான துல்லியமான மின்கட்டணத்தை கணக்கிட்டு செலுத்துவது எப்படி?... மின்வாரியத்துறை விளக்கம்..!!

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

 வீடுகளுக்கான துல்லியமான மின்கட்டணத்தை கணக்கிட்டு செலுத்துவது எப்படி?... மின்வாரியத்துறை விளக்கம்..!!

வீடுகளுக்கான துல்லியமான மின் கட்டணத்தை கணக்கிட்டு செலுத்துவது எப்படி? என்பது குறித்து மின் வாரியத்துறை விளக்கம் அளித்துள்ளது. 

இது தொடர்பாக மின் வாரியம் வௌியிட்டுள்ள அறிக்கை: 

கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டிற்கான மின் கட்டணமே இம் முறையும் செலுத்திக் கொள்ள ஏதுவாக 2020 மே, ஜூன் கட்டண விவரங்கள் தற்போது பதிவேற்றப்பட்டு வருகின்றன. மின்வாரிய அலுவலகத்திலோ அல்லது இணைய வழியிலோ இந்த கட்டணத்தை செலுத்தலாம். இந்த கட்டணம் உத்தேச கட்டணம் மட்டுமே. மின்நுகர்வோர் விரும்பினால், இம் மாதத்திற்கான சரியான கட்டணத்தை அவர்களை கண்டறிந்து மின்வாரிய அலுவலகத்தில் நேரில் சென்று செலுத்தலாம்.

கட்டணத்தை கீழ்க்கண்ட முறைகளில் கண்டறியலாம். 

அதாவது உங்களது வீட்டில் உள்ள மின் அளவு வீட்டுப் பெட்டியை (மீட்டர் பாக்ஸ்) கவனித்தீர்களானால் தேதி, நேரம், மின் பயன்பாட்டு அளவு உள்ளிட்ட தரவுகள் அடுத்தடுத்து சுழற்சி முறையில் தோன்றும். 

இந்த செய்தியையும் படிங்க...

National High Speed Rail Corporation Ltd. 2021 – மாத ஊதியம் ரூ.2 லட்சம்..!! 

இதைக் கவனிப்பதில் சிக்கல் இருந்தால், மீட்டர் பாக்ஸில் உள்ள வெள்ளை நிற வட்ட வடிவ பட்டனை ஒவ்வொரு முறை அழுத்தும் போதும், இந்த தரவுகள் மாறி மாறி தோன்றும். 

அதில் Cu. KWH என்ற அலகீட்டுடன் தோன்றுவதே மின் பயன்பாட்டு அளவீடு.

 அதை செல்லில் போட்டோ எடுத்து மின்வாரிய அலுவலகத்தில் சென்று காண்பித்தால், கடந்த முறை வரையான கணக்கீட்டிலிருந்து கழித்து தற்போதைய கட்டணத்தை அலுவலர் கணக்கிட்டு கூறுவதோடு, அதை கம்ப்யூட்டர் வழி பதிவேற்றிக் கொள்வார்.

அந்தக் கட்டணத்தை மின்நுகர்வோர் செலுத்தி விடலாம்.

 கடந்த முறை வரையிலான மின் பயன்பாட்டு அளவு தெரியும் எனில், மின் நுகர்வோர்களை கழித்துத் தற்போதைய கட்டணத்திற்கான மின் அளவைத் தெரிந்து கொண்டு மின் கட்டணத்தை கணக்கிடலாம். 

அதாவது மின் பயன்பாட்டு அளவுடன் கணக்கீட்டின்படி பயன்பாட்டு கட்டணத்தை கணக்கிட்டு, அதனுடன் நிரந்தரக் கட்டணத்தையும் சேர்த்து (பணமாக) எடுத்துக் கொண்டு மின்வாரிய அலுவலகத்தில் செலுத்தி விடலாம்.

 இவ்வாறு கணக்கிடும் கட்டணத்தை மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று தான் செலுத்த முடியும் இணைய வழியில் கடந்த ஆண்டிற்கான கட்டணத்தைத் தான் காட்டும் என்பதால் செலுத்த முடியாது.

வீட்டு மின் பயன்பாட்டு கட்டணம் 100 யூனிட் வரை 200 யூனிட் வரை, 500 யூனிட் வரை, 500 யூனிட்டிற்கு மேல் என 4 முறைகளில் கணக்கிடப்படுகிறது. 

100 யூனிட் வரை பயன்படுத்துவதற்கு கட்டணம் இல்லை. 

101 யூனிட்டிலிருந்து 200 யூனிட் வரை ரூ.2ம், 

201 யூனிட்டிலிருந்து 500 யூனிட் வரை ரூ.3ம், நிரந்தரக் கட்டணமாக ரூ.30ம்,

 500 யூனிட்டிற்கு மேல் பயன்படுத்துவோர்,  ரூ.3.50ம், 

201 யூனிட்டிலிருந்து 500 யூனிட் வரை ரூ.4.60க்கும், 

500க்கு மேல் யூனிட்டிற்கு ரூ.6.60ம், நிரந்தரக் கட்டணமாக ரூ.50ம் வசூலிக்கப்படுகிறது.

உதாரணமாக கடந்த முறை 2770 Cu.Kw, இம்முறை 3167 Cu.Kw எனில் பயன்பாடு 397 யூனிட்கள் ஆகும். அதாவது  மின்பயன்பாடு 3167 யூனிட்டிலிருந்து கடந்த முறை மின் பயன்பாட்டு அளவான 2770 யூனிட்டை கழிக்க வேண்டும். அவ்வாறு கழித்தால் 397 யூனிட்கள் வருகிறது. மேற்குறிப்பிட்ட கணக்கீட்டில் 200 யூனிட்டிற்கு மேல் பயன்படுத்தியுள்ளதால் 500 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கான கணக்கீட்டீன் கீழ் வரும். அதன்படி 1 முதல் 100 யூனிட்டிற்கு கட்டணம் இல்லை. 101 யூனிட்டிலிருந்து 200 யூனிட் வரை யூனிட்டுக்கு தலா ரூ.2 வீதம் ரூ.200ம், 201 யூனிட் முதல் 397 வரையிலான 197 யூனிட்களுக்கு தலா ரூ.3 வீதம் ரூ.591ம், நிரந்தர கட்டணமாக ரூ.30ம், மொத்தம் ரூ.821 செலுத்த வேண்டும்.

இந்த செய்தியையும் படிங்க...

NCOIS  வேலைவாய்ப்பு 2021 –NO EXAM..!!  

போட்டோ எடுத்து கட்டணத்தை கணக்கீடு செய்தீர்கள் என்றால், மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று, அதைகாட்டி, தற்போதைய அளவீட்டை பதிவேற்றி அதன்பின்னர் கட்டணம் செலுத்த வேண்டும். CORONA தடுப்பு நடவடிக்கைகளான மூக்கு மற்றும் வாயை முழுமையாக இரட்டை முகக் கவசங்களால் மூடிக் கொண்டு, தனி மனித இடைவெளியை பின்பற்றி கட்டணம் செலுத்த வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.




Post a Comment

0 Comments