பெட்ரோல், டீசல் விலை எப்போது குறையும்..??அமைச்சர் விளக்கம்..!!
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்போது பேசிய அதிமுக எம்எல்ஏ அக்ரி கிருஷ்ணமூர்த்தி, பெட்ரோல், டீசல் விலைகுறைப்பு பற்றி திமுக அறிக்கையில் குறிப்பிட்டிருந்ததை சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பினார்.
ALSO READ...
தமிழகத்தில் ஒருவருக்கு டெல்டா பிளஸ் கொரோனா(DELTA PLUS CORONA)-சுகாதாரத்துறை செயலாளர் ..!!
இதற்கு பதிலளித்த நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பல்வேறு விளக்கங்களை முன்வைத்தார். அதில், மத்திய அரசின் வரி உயர்வு காரணமாகத்தான் பெட்ரோல், டீசல் விலை ஏறிவருவதாகக் கூறினார்.மேலும் தமிழகத்தின் நிதி நிலைமை தற்போது சரியில்லை எனவும், எப்போது நிதி நிலைமை சீராகிறதோ அப்போது பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்றும் கூறினார்.
மேலும், 2014ம் ஆண்டு பெட்ரோல், டீசல் மீதான செஸ் வரி 9 ரூபாயாக இருந்ததை சுட்டிக்காட்டி, அப்போது ஆட்சியிலிருந்த அதிமுக அரசு பெட்ரோல் வரியை 28ல் இருந்து 30ஆக மாற்றியது என்று குறிப்பிட்டார்.
0 Comments