'உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர்' :முதல்வரின் தனி பிரிவு சிறப்பு அதிகாரியாக ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமனம்..!!
தமிழ்நாட்டில் திமுக அரசு பெறுப்பேற்றவுடன் 'உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர்' என்ற புதிய துறை உருவாக்கப்பட்டு, அதற்கான சிறப்பு அலுவலராக ஷில்பா பிரபாகர் சதீசை தமிழ்நாடு அரசு நியமித்தது. இந்நிலையில், மின்னணு நிர்வாகத்தின் சிறப்பு அதிகாரியாகவும் ஷில்பா பிரபாகர் சதீஷுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தலைமைச் செயலர் இறையன்பு பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது,
உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் சிறப்பு அதிகாரி ஷில்பா பிரபாகர் சதீஷுக்கு கூடுதல் பொறுப்பாக முதல்-அமைச்சர் தனிப் பிரிவின் சிறப்பு அதிகாரி பொறுப்பும், குறைதீர் மற்றும் இ-ஆளுமை பிரிவும் கூடுதல் பொறுப்பும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியையும் படிங்க...
தமிழ்நாட்டில் கரோனா 3ஆம் அலையைத் தடுப்பதற்கான ஏற்பாடுகள்- முதல்வர் அறிவிப்பு..!!
செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் ஜெயசீலனுக்கு கூடுதல் பொறுப்பாக அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments