தற்போது யார், யாருக்கு தடுப்பூசி போட வேண்டும்..??- மருத்துவ நிபுணர்கள்..!!
CORONA தொற்று கடந்த ஆண்டு முதல் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா முதல் அலையை விட இரண்டாவது அலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. இந்த தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்கும் விதமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக LOCKDOWN அமல்படுத்தப்பட்டு தடுப்பூசி போடும் பணி தீவிரமடைந்து வருகிறது. ஆரம்பத்தில் மக்கள் தடுப்பூசி பற்றின வதந்திகளால் தடுப்பூசி போட தயக்கம் காட்டினாலும் தற்போது பலர் தாமாக முன்வந்து தடுப்பூசி செலுத்தி கொள்கின்றனர்.
இந்த செய்தியும் படிங்க...
வீட்டை விட்டு வெளியே செல்வோர் தவறாமல் பின்பற்ற வேண்டிய விஷயங்கள்..!!
இந்திய பொது சுகாதார சங்கம் (ஐபிஹெச்ஏ), இந்திய தடுப்பு மற்றும் சமூக மருத்துவ சங்கம் (ஐஏபிஎஸ்எம்) மற்றும் இந்திய தொற்றுநோயியல் நிபுணர்கள் சங்கம் (ஐஏஇ) ஆகியவற்றின் மருத்துவ வல்லுநர்கள் இது தொடர்பான பரிந்துரை அடங்கிய அறிக்கை வெளியிட்டுள்ளனர். தடுப்பூசி என்பது CORONA வைரசுக்கு எதிரான ஒரு வலுவான மற்றும் சக்திவாய்ந்த ஆயுதமாகும். மேலும் அனைத்து வலுவான ஆயுதங்களையும் போலவே இது நிறுத்தப்படவோ அல்லது கண்மூடித்தனமாக பயன்படுத்தப்படவோ கூடாது; ஆனால் செலவு குறைந்த வழியில் அதிகபட்ச நன்மைகளைப் பெற அதனை மூலோபாய ரீதியாக பயன்படுத்தப்பட வேண்டும்.
தடுப்பூசியை வகையின்றி அரைகுறையாக செலுத்தினால் அது உருமாறிய CORONA பாதிப்பு விளைவுகளை ஏற்படுத்தும். ஏற்கனவே CORONA நோய் தொற்று ஆளானவர்களுக்கு தடுப்பூசி போட வேண்டிய அவசியமில்லை. நோய்க்கு பிறகு தடுப்பூசி பலன் தரும் என்று உறுதி செய்யப்பட்ட பிறகு தடுப்பூசி போடலாம். தற்போதுள்ள நிலையில் CORONA-வால் அதிக ஆபத்தில் உள்ளவர்கள், நோய் தொற்று பாதிக்கும் அபாயம் உள்ளவர்களுக்கு முதலில் முழுமையாக தடுப்பூசி போட வேண்டும்.
இந்த செய்தியும் படிங்க...
உடலில் ஆக்சிஜன் அளவு - குறைவதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்..!!
இளைஞர்களுக்கு இயற்கையாகவே எதிர்ப்பு சக்தி அதிகம் இருக்கும் என்பதால் அவர்கள் மீது அதிக கவன செலுத்த அவசியமில்லை. இளைஞர்கள் தடுப்பூசி போடுவது கூடுதல் செலவுகளையும் ஏற்படுத்தலாம். தற்போது யாருக்கு தடுப்பூசி தேவை என்ற முடிவில் மத்திய அரசு தெளிவாக இருக்க வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.
0 Comments