Join Our Whats app Group Click Below Image

பெருங்குடல் அழற்சி: அன்றாட உணவு முறைகளின் மூலமாகவே எப்படி தடுக்க முடியும்..!!

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

பெருங்குடல் அழற்சி: அன்றாட உணவு முறைகளின் மூலமாகவே எப்படி தடுக்க முடியும்..!! 

தற்போதைய ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கத்தால் நிறைய பேர்கள் பெருங்குடல் தொற்றை சந்திக்கின்றனர். பெருங்குடலில் புண் ஏற்படுவதைத் தான் பெருங்குடல் அழற்சி என்கிறார்கள். இதனால் நமது குடலின் செயல்பாடுகள் பாதிப்படைகிறது. நீங்கள் நெடுநாட்களாக கண்டு கொள்ளாமல் விட்டால் பெருங்குடல் முழுமையாக பாதிப்படைய ஆரம்பித்து விடும். இதை நம்முடைய அன்றாட உணவு முறைகளின் மூலமாகவே எப்படி தடுக்க முடியும் என்பது குறித்து இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

இந்த செய்தியும் படிங்க...

"DO NOT SKIP YOUR BREAKFAST - காலை உணவை தவிர்க்காதீர்கள்"..!!  

சிறந்த முறையில் உணவுகள் செரிமானமாக பின்வரும் வழிமுறைகளை பின்பற்றலாம்.

வெதுவெதுப்பான தண்ணீர்:

உணவு செரிமானமாவதில் பிரச்சனை இருப்பது தெரிந்தால் உடனே வெதுவெதுப்பான தண்ணீரை பருகவும். அதிலும் குறிப்பாக காலையில் சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு வெதுவெதுப்பான தண்ணீரைப் பருகினால், உடலில் இருக்கும் செரிமான அமைப்பைச் சுத்தப்படுத்தி, செரிமானத்திற்குத் தேவையான திரவத்தை மட்டும் சுரக்கச் செய்துவிடும். அதன் மூலம் செரிமானம் தங்கு தடையின்றி நடைபெறும்

உணவுப் பழக்கம்:

சாப்பிடும் போது ஒரு முறையான உணவுப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அது செரிமானப் பிரச்சனைகளிலிருந்து காப்பாற்றும். சாப்பிடும் போது, முதலில் எளிதாக செரிமானமாகும் உணவுகளை சாப்பிடத் தொடங்க வேண்டும். பின் படிப்படியாக கடினமான மற்றும் சத்து அதிகமான உணவுகளைச் சாப்பிட வேண்டும். அதாவது முதலில் பழங்கள் அல்லது பழச் சாறுகள் போன்றவற்றை சாப்பிட்டு, அதற்கு பின்பு அசைவ உணவுகளை சாப்பிட வேண்டும். இந்த பழக்கம் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதை அனுமதிக்காது. மேலும் அது செரிமான பிரச்சனைகளை மிக எளிதாக முடிவுக்குக் கொண்டு வந்துவிடும்.

உணவருந்தும் முறை:

உணவருந்தும் முறையிலும் செரிமானக் கோளாறுகள் உள்ளன. எனவே நன்றாக மற்றும் வசதியாக அமர்ந்து கொண்டு, ரசித்து, ருசித்து உணவை சாப்பிட வேண்டும். இவ்வாறு அமர்ந்து உணவருந்தும் போது, வயிறு இறுக்கமாக இல்லாமல் நெகிழ்வு தன்மையுடன் இருக்கும். மேலும் அது நன்றாக செரிமானமாக வழிவகுக்கும்.

தண்ணீர்:

செரிமானம் சரியாக நடக்க வேண்டும் என்றால் அதற்கு சரியான வழி, அதிகமாக தண்ணீர் குடிப்பது தான். எனவே நாள் ஒன்றுக்கு 8 முதல் 10 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். அவ்வாறு அதிகமாக தண்ணீர் குடிக்கும் போது, அது மலச்சிக்கலை நீக்கி, மிக எளிதாக செரிமானம் நடைபெற வழிவகுக்கிறது.

இந்த செய்தியும் படிங்க...

உடல் எடையை குறைக்க - எளிய வழிமுறைகள் !!  

எலுமிச்சைப் பழச்சாறு:

காலையில் வெதுவெதுப்பான தண்ணீரை பருகுவதில் விருப்பம் இல்லை என்றால் அதற்குப் பதிலாக எலுமிச்சைப் பழச்சாற்றை அருந்தலாம். தினமும் எலுமிச்சைப் பழச்சாற்றை தவறாமல் அருந்தி வந்தால், வயிற்றில் இருக்கும் கழிவுகள் மற்றும் அளவுக்கு அதிகமான வாயுக்கள் போன்றவற்றை நீக்கி, அருமையான செரிமானத்திற்கு வழங்கும்

மசாஜ்:

செரிமானம் தங்கு தடையின்றி நடைபெற, ஓய்வாக இருக்கும் போது, வயிற்றுப் பகுதியில் எண்ணெய் தடவி மசாஜ் செய்து கொள்ளலாம். இந்த எண்ணெய் மசாஜ் செரிமானக் கேளாறை நீக்கிவிடும்.

மென்று சாப்பிடுதல்:

உணவு அருந்தும் போது, குறைவான அளவு உணவை வாயில் வைத்து, அதை நன்றாகக் கடித்து, மென்று மெதுவாக சாப்பிட வேண்டும். அவ்வாறு சாப்பிடும் போது, உணவு செரிமானத்திற்கு தேவையான கார்போஹைட்ரேட் வாயில் உற்பத்தியாகிவிடும்.

நார்ச்சத்துள்ள உணவுகள்:

நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளான செர்ரி, திராட்சை, மிளகு, தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். மேலே சொன்ன உணவுகள் அனைத்தும் மிக எளிதாக செரிமானமாகிவிடும்.

கொழுப்புச்சத்து:

செரிமானமாக நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும் உணவுகள், கண்டிப்பாக செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். குறிப்பாக கொழுப்புச்சத்து அதிகம் உள்ள உணவுகள் செரிமானமாக நீண்ட நேரம் ஆகும். ஆகவே கொழுப்புச்சத்து அதிகம் உள்ள உணவுகளை அதிகமாக சாப்பிடாமல் இருப்பது நல்லது. வேண்டுமெனில் கொழுப்புச்சத்து அதிகமுள்ள உணவுகளை குறைவாக சாப்பிட்டு, மற்ற உணவுகளை அதிகமாக சாப்பிடலாம்.

வைட்டமின் C உணவுகள்:

உணவில் வைட்டமின் சி சத்து நிறைந்த உணவுகளான ப்ராக்கோலி, தக்காளி, கிவி பழம் மற்றும் ஸ்ட்ராபெர்ரி போன்றவற்றை அதிகம் சேர்க்க வேண்டும். மேலும் பழங்கள் மற்றும் காய்களை அதிகம் சாப்பிட வேண்டும். இதனால் அவை மலச்சிக்கலை நீக்கி எளிதாக செரிமானம் நடைபெற வழிவகுக்கும்.

செரிமானத்தை அதிகரிக்கும் உணவுகள்:

மிக விரைவாக செரிமானம் நடைபெற வைக்கும் உணவுப் பொருட்களான இஞ்சி, கருப்பு மிளகு, கல் உப்பு மற்றும் கொத்தமல்லி போன்றவற்றை அதிகமாகச் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை செரிமான மண்டலத்தின் வேகத்தை அதிகரிக்கும்.

நேரம்:

மிக எளிதாக செரிமானமாக வேண்டுமென்றால் ஒரு முறையான சாப்பாட்டு நேரத்தை வைத்துக் கொள்ள வேண்டும். தினமும் அதே நேரங்களில் உணவை அருந்த வேண்டும். காலம் கடந்து உணவு உண்ணுதல் மற்றும் முறையான நேரம் இல்லாமல் உணவு அருந்துதல் போன்றவற்றை அறவே தவிர்ப்பது நல்லது.

உடல் எடை:

குண்டாக இருப்பது மற்றும் அதிக எடையுடன் இருப்பது ஆகியவை அதிகமான செரிமான கோளாறுகள் மற்றும் வாயுத் தொல்லைகளை ஏற்படுத்தும். ஆகவே மருத்துவரை அணுகியோ, போதிய டயட்டை மேற்கொண்டோ எடையைச் சரியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

இறைச்சி:

அசைவப் பிரியராக இருந்தால், கொழுப்புச்சத்து அதிகமுள்ள இறைச்சியால் செரிமானப் பிரச்சனைகள் ஏற்படும். எனவே கொழுப்புச்சத்து குறைந்த இறைச்சிகள் மற்றும் தோல் நீக்கப்பட்ட கோழி இறைச்சி ஆகியவற்றை உண்ணலாம். அது செரிமானக் கோளாறை அதிகம் ஏற்படுத்தாது.

இந்த செய்தியும் படிங்க...

உடல் வெப்பத்தைத் தணிக்கும் -உணவுகள்..!! 

இயற்கை உபாதைகள்:

இயற்கை உபாதைகள் ஏற்படும் போது உடனே கழிவறைக்குச் சென்று விட வேண்டும். அவ்வாறு செல்லாமல் அடக்கி வைத்திருந்தால், உடலில் உள்ள கழிவுகள், உடலில் பல கேடுகளை விளைவிக்கும்.

உடற்பயிற்சி:

தினமும் முறையாக உடற்பயிற்சி செய்து வந்தால், செரிமானப் பிரச்சனைகள் வராது. மேலும் உடற்பயிற்சி இரத்த ஓட்டத்தையும் சீராக்கும்.


Post a Comment

0 Comments