Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..
இயற்கையான முறையில்: கருமையான தலைமுடி வளர-மருத்துவ குறிப்புகள்..!!
இரவில் நெல்லிக்காய், கடுக்காய் பொடிகளை தண்ணீரில் கலந்து காய்ச்சி ஊறவைத்து காலையில் அதனுடன் எலுமிச்சை பழச்சாறு கலந்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.
கறிவேப்பிலை அல்லது வெந்தயத்தைப் அரைத்து பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்குப் பிறகு தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.
தேங்காய் எண்ணெய்யில் காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து காய்ச்சி தலையில் தேய்த்தாலும் முடி நன்கு வளரும்.
நேர்வாளங்கொட்டையில் உள்ள பருப்பை எடுத்து நீரை விட்டு நன்கு அரைத்து சொட்டை உள்ள இடத்தில் தடவி வந்தால் முடிவளரும்.
கீழநெல்லி வேரை சுத்தம் செய்து தேங்காய் எண்ணெயில் சிறிய துண்டாக நறுக்கி போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.
உணவில் நெல்லிக்காயை அடிக்கடி சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும்.
ஆலமர வேர், செம்பருத்தி பூ ஆகியவற்றை இடித்துத் தூள் செய்து தேங்காய் எண்ணெய்யில் காய்ச்சி ஊறவைத்து தலைக்குத் தேய்த்து வந்தால் முடி கருப்பாகும்.
காய்ந்த நெல்லிக்காயை பொடியாக்கி தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும்.
5 மில்லி தண்ணீரில், 20 கிராம் அதிமதுரத்தை அதில் போட்டு காய்ச்சி ஆறிய பின் பாலில் 15 நிமிடம் ஊறவத்து, பின் கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊறவைத்து குளித்து வந்தால் தலை முடி கருமையுடன் மினுமினுப்பு பெறும்.
0 Comments