'தமிழகம் செழிக்க வேண்டும் என்பது மத்திய அரசின் ஆசை'..!!
சமீபத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின், கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்துப் பேசினார். முதல்வர், கவர்னரைச் சந்திப்பது பெரிய விஷயம் கிடையாது. வழக்கமாக நடப்பது தான்.ஆனால் அடுத்த சில நாட்களிலேயே தெலுங்கானா கவர்னரும், புதுச்சேரி பொறுப்பை கவனிப்பவருமான தமிழிசையும், தமிழக முதல்வரை சமீபத்தில் சந்தித்தார்.
இந்த செய்தியையும் படிங்க...
அரசு பள்ளிகளுக்கு அறிவுறுத்த பள்ளிக் கல்வித் துறை ஆணையருக்கு -உயர் நீதிமன்றம் உத்தரவு.!!
'இது ஒரு சம்பிரதாய சந்திப்பு' என, கூறப்பட்டது.ஆனால் டில்லி அரசியல் வட்டாரங்களில் இது குறித்து வேறு விதமாக சொல்கின்றனர். 'தமிழகத்துடன் சுமுகமான உறவையே மோடி அரசு விரும்புகிறது. தமிழகம் செழிக்க வேண்டும் என்பது மத்திய அரசின் ஆசை' என, சொல்லப்படுகிறது. இதனால் சில தகவல்களை கவர்னர்கள் வாயிலாக மத்திய அரசு, முதல்வருக்கு தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது.
0 Comments