பாசிப்பயறு முளைகட்டி சாப்பிடுவதால் - ஏராளமான நன்மைகள்..!!
நமது உடலை பாதுகாப்பதற்கு தினமும் சத்துக்களை வழங்கும் உணவு பொருட்களை உட்கொள்வது உடலுக்கு நல்லது. உடலுக்கு சத்துக்களை வாரி வழங்குவதில் பயறு வகைகளுக்கும் இடம் உண்டு.
சிறுபயறு மற்றும் பச்சை பயிறு என்று அழைக்கப்படும் பாசிப்பயறை சாப்பிடுவதன் மூலமாக., நமது உடலுக்கு தேவையான இரும்பு சத்து மற்றும் புரத சத்தானது கிடைக்கிறது. இதில் குறைந்தளவு கொழுப்பு சத்தானது உள்ளதால் நமது உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது.
இந்த செய்தியையும் படிங்க...
இரத்தத்தை சுத்திகரிக்க உதவும் அற்புத உணவுகள்..!!
இதுமட்டுமல்லாது சுண்ணாம்பு சத்து மற்றும் பொட்டாசிய சத்தும் அடங்கியுள்ளது. எல்லோம் பச்சை பயிறு உணவில் எடுத்துக் கொள்வது சிறந்தது என்று கூறுவார்கள்.
- முளைத்த பயறு அல்லது பருப்பு வகைகளில் உள்ள டானின்கள், லெக்டின்கள் பைபெட்டுகள் உடலில் உள்ள நுண்ணுயிர் எதிர்ப்பினை குறைக்கின்றன.
- மேலும், முளை கட்டிய பயறு வகைகளால் பெரும்பாலும் இரைப்பை மற்றும் குடல் பிரச்னை அதிக அளவில் ஏற்படுகின்றன. முளை கட்டிய பாசிப்பயறை உண்பதால் சிறு சிறு குடல் பிரச்னை மற்றும் வயிறு பிரச்சனை தவிர வேறு எந்த விதமான பக்க விளைவுகளும் ஏற்படுவதில்லை.
- முளை கட்டிய பச்சை பயரினை விட வேக வைத்து சமைத்த பச்சை பயரே சிறந்த சுவையை கொண்டது. சமைத்த பச்சை பயரால் எந்த விதமான குடல் பிரச்சனைகளும் ஏற்படுவதில்லை.
- ஆனாலும், முழு பச்சை பயரை வேக வைத்து சமைப்பதன் அதிலுள்ள ஊட்டச்சத்து, முளை கட்டிய பச்சை பயறைக் காட்டிலும் குறைந்தே இருக்கும்.
- ஒட்டுமொத்தமாக இரண்டு விதமான பச்சை பயறும் ஒவ்வொருவரின் உடலுக்கு உகந்த வகையில் சிறந்ததே ஆகும்
0 Comments