Join Our Whats app Group Click Below Image

" உள்ளாட்சி தேர்தல் : அதற்கான தயாரிப்பு கூட்டம் நாளை நடைபெறும்" - திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்..!!

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

 " உள்ளாட்சி தேர்தல் : அதற்கான தயாரிப்பு கூட்டம் நாளை நடைபெறும்" - திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்..!!

திமுக உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராகிறது;அதற்கான தயாரிப்பு கூட்டம் நாளை நடைபெறும் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியையும் படிங்க...   

 மேனிலைப் பள்ளி மாணவர்களுக்கு -வரும் ஜுலையில் பள்ளிகள் தொடங்கப்படலாம்..!!

தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தலை வரும் செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் நடத்தி, அதன் முடிவுகளை அறிவிக்க மாநில தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து,சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார்.பின்னர், உள்ளாட்சித் தேர்தல் பணிகளை முடிக்க கூடுதல் அவகாசம் தேவைப்படுவதால் தனி அலுவலர் பதவி காலம் நீட்டிக்கபடுவதாக தமிழக அரசு தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில்,திமுக உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராகிறது,அதற்கான தயாரிப்பு கூட்டம் நாளை நடைபெறும் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியையும் படிங்க...   

 பள்ளிக்கல்வித்துறை ஆணையர் பதவிக்கு எதிரான வழக்கு- தள்ளுபடி..!!

 மேலும்,இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

"கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில்,தி.மு.க.மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் வருகிற 25-06-2021 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணி அளவில், சென்னை, அண்ணா அறிவாலயம், "கலைஞர் அரங்கத்தில்" நடைபெறும்.

அக்கூட்டத்தில்,மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்." என்று தெரிவித்துள்ளார்.


Post a Comment

0 Comments