Join Our Whats app Group Click Below Image

கருப்புப் பணம் (Black Money)வங்கிகளில் டெபாசிட் :வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவு..!!

Welcome to Our Tamil Crowd Website...

 கருப்புப் பணம்(Block Money) வங்கிகளில் டெபாசிட் :வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவு..!!

பண மதிப்பிழப்பின் போது வங்கிகளில் பதிவான சிசிடிவி(CCTV) காட்சிகளை பத்திரமாக வைத்திருக்கும்படி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என ஒரே நாளில் மத்திய அரசு அறிவித்தது.

இந்த செய்தியையும் படிங்க...

MBBS படிப்புகளில் அரசு உதவி பெறும் மாணவர்களுக்கு 2.5 % உள் ஒதுக்கீடு- நாளை ஆலோசனை..!! 

மாற்றாக புதிய 500, 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டன. பண மதிப்பிழப்பின் போது பழைய நோட்டுகளை கொடுக்கவும், புது நோட்டுகளை வாங்கவும் மக்கள் வங்கிகளில் காத்துக் கிடந்தனர்.

இந்நிலையில் பணமதிப்பழிப்பு அறிவிப்பு வெளியான பின்னர் நிறையப்பேர் முறைகேடாக ரூ .500, ரூ .1000 நோட்டுகளை அதிகளவில் வங்கிகளில் டெபாசிட் செய்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அவை கருப்புப் பணமாக(Black Money இருக்கலாம் எனவும் சந்தேகிக்கிறது.

அப்போது யாரெல்லாம் வங்கிக் கிளைகளுக்கு வந்து பணத்தை டெபாசிட் Deposit செய்தார்கள் என்ற விவரங்களைத் தெரிந்துகொள்ள அன்றைய நாளில் எடுக்கப்பட்ட CCTV கேமரா பதிவுகளைப் பத்திரமாக வைக்கும்படி வங்கிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2016 நவம்பர் 8 முதல் 2016 டிசம்பர் 30 வரையிலான CCTV கேமரா பதிவுகளை அழிக்காமல் பத்திரமாக வைத்திருக்க வேண்டும் என்று மத்திய அறிவுறுத்தியுள்ளது.

Post a Comment

0 Comments