Join Our Whats app Group Click Below Image

தமிழ்நாட்டில் இருந்து 6 அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு: தேசிய விருது அறிவிப்பு..!!

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

தமிழ்நாட்டில் இருந்து 6 அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு: தேசிய விருது அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் இருந்து 6 அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு தொழில்நுட்பத்துக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த அறிவிப்பை மத்தியக் கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இந்த செய்தியையும் படிங்க...   

 ஒன்று முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை தீவிரம்..!!


மத்தியக் கல்வி அமைச்சகம் சார்பில் 2010-ம் ஆண்டு முதல் தகவல் தொழில்நுட்பத்தில் படைப்பாற்றலைக் கொண்டு சிறப்பாகக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு ஐசிடி விருது வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் NCERT  சார்பில் இந்த விருது விழா நடத்தப்பட்டு வருகிறது. இதில் கல்வித்துறை சார்ந்து சிறந்த முறையில் தகவல் மற்றும் தொழில்நுட்பம் மூலம் கற்பிப்பவர்களுக்கு விருது வழங்கப்படுகிறது.

தமிழகப் பிரதிநிதித்துவத்தின்படி 6 ஆசிரியர்கள் மாநிலம் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டு, அனுப்பப்படுவர். அதில் அதிகபட்சமாக 3 ஆசிரியர்களை மத்திய அரசு தேர்ந்தெடுத்து கவுரவிக்கும். அந்த வகையில் 2018 மற்றும் 2019-ம் ஆண்டுக்கான விருது பெற்ற ஆசிரியர்களின் பட்டியலை NCERT வெளியிட்டுள்ளது. 

இந்த செய்தியையும் படிங்க...   

 ஜூலை 6: முதல்வரை சந்திக்கும் தனியார் பள்ளி சங்கத்தின் நிர்வாகிகள்..!! 

 கொரோனா காலம் என்பதால் இதற்காக நாடு முழுவதும் இருந்து ஆசிரியர்கள் இணைய வழியில் நடைபெற்ற தேர்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களின் கற்பித்தல் மாதிரிகளை விளக்கினர். இதில் 2018-ம் ஆண்டுக்கான விருதுப் பட்டியலில் நாடு முழுவதிலும் இருந்து 25 ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இருந்து அதிகபட்சமாக 3 ஆசிரியர்கள் விருது பெற்றுள்ளனர்.

அவர்களின் விவரங்கள்

1.கணேஷ்,

கிளரியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி,

திருவாரூர் மாவட்டம்.

2.மனோகர் சுப்பிரமணியம்

வெள்ளியணை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி,

கரூர் மாவட்டம்.

3.தயானந்த்

உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி,

திருப்பூர் மாவட்டம்.

அதேபோல 2019-ம் ஆண்டுக்கான விருதுப் பட்டியலில் நாடு முழுவதிலும் இருந்து 24 ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதில் தமிழகத்தில் இருந்து அதிகபட்சமாக 3 ஆசிரியர்கள் விருது பெற்றுள்ளனர்.

அவர்களின் விவரங்கள்

1.செந்தில் செல்வன், 

(குறைந்த செலவில் ஸ்மார்ட் போர்டை உருவாக்கியவர். கணிதப் பாடத்துக்கு ஜியாமென்ட்ரி, கிராஃப் உள்ளிட்டவற்றுக்கான வழிமுறை விளக்கங்களை எளிய முறையில் 'பவர்பாயிண்ட் பிரசண்டேஷன்' அமைத்தவர்)

மாங்குடி அரசு மேல்நிலைப் பள்ளி,

சிவகங்கை மாவட்டம்.

2.தங்கராஜா மகாதேவன், 

(அனிமேஷன் பாடங்களை உருவாக்கி, சூழலியல் சார்ந்த வீடியோக்களைத் தயாரித்துக் கற்பிப்பவர்)

பாரப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி,

3.இளவரசன்

 (தொழில்நுட்பத்தின் உதவியுடன் 22 நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுடன் தன் மாணவர்களை உரையாட வைத்தவர், அரசு அறிமுகப்படுத்தும் முன்னரே க்யூஆர் கோடு திட்டத்தைச் செயல்படுத்தியவர்)

வேடப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி,

சேலம் மாவட்டம்.

Post a Comment

0 Comments