Join Our Whats app Group Click Below Image

3.61 லட்சம் பேருக்கு புது வீடு-மத்திய அரசு ஒப்புதல் ..!!

Welcome to Our Tamil Crowd Website...

3.61 லட்சம் பேருக்கு புது வீடு-மத்திய அரசு ஒப்புதல் ..!!

பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் 3.61 லட்சம் வீடுகளைக் கட்டிமுடிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

நகர்ப்புற ஏழை மக்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கும் நோக்கில் கடந்த 2015ஆம் ஆண்டு மத்திய அரசால் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம்Pradhan Mantri Awaas  Yojana கொண்டுவரப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 2022ஆம் ஆண்டுக்குள் 2 கோடி வீடுகள் கட்டித்தர இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.

இந்த திட்டத்தின் கீழ் இதுவரையில் 112.4 லட்சம் வீடுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதில் 48.31 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு உரியவர்களிடம் வழங்கப்பட்டுவிட்டது. மீதமுள்ள வீடுகளுக்கு அடித்தளங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியையும் படிங்க...

DO YOU KNOW WHY BACK PAIN( முதுகு வலி) OCCURS..??  

 பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா(PMAY)திட்டத்தின் மொத்த முதலீட்டுத் தொகை ரூ.7.35 லட்சம் கோடி. இதில் ரூ.1.81 லட்சம் கோடியை மத்திய அரசு வழங்குகிறது. இந்நிலையில் பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் மேலும் 3.61 லட்சம் வீடுகளைக் கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

டெல்லியில் நடைபெற்ற இந்தத் திட்டத்தின் கீழ் இயங்கும் மத்திய ஒப்புதல் அளித்தல் மற்றும் கண்காணிப்புக் குழுவின் 54ஆவது கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இக்கூட்டத்தில் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் கலந்துகொண்டன.

Post a Comment

0 Comments