Join Our Whats app Group Click Below Image

ரூ.2 ஆயிரம் மாத உதவித் தொகையுடன் எம்.ஏ. தமிழ் படிக்கலாம்-உலகத் தமிழ்ஆராய்ச்சி நிறுவனம்..!!

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

 ரூ.2 ஆயிரம் மாத உதவித் தொகையுடன் எம்.ஏ. தமிழ் படிக்கலாம்-உலகத் தமிழ்ஆராய்ச்சி நிறுவனம்..!!

 12ஆம் வகுப்பு முடித்துள்ள மாணவர்கள் மாதம் ரூ.2 ஆயிரம் உதவித் தொகையுடன் கூடிய ஒருங்கிணைந்த எம்.ஏ.தமிழ் முதுகலை படிப்பில் சேருவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று உலகத் தமிழ்ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த செய்தியையும் படிங்க...


இதுதொடர்பாக உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் கோ.விசயராகவன் (24.6.2021) வெளியிட்ட செய்திக்குறிப்பு: 

சென்னை தரமணியில் இயங்கிவரும் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் அனுமதியுடன் ஒருங்கிணைந்த முதுகலை எம்.ஏ. தமிழ்படிப்பு வழங்கப்படுகிறது. இப்படிப்புக்கு எவ்வித கட்டணமும் கிடையாது. இப்படிப்பில் சேரும் மாணவர்களில் 15 பேருக்கு தமிழக அரசால் மாதம்தோறும் ரூ .2 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும் .

நடப்பு கல்வி ஆண்டில் (2021-2022) இப் படிப்பில் சேர PLUS TWO  முடித்த மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படு கின்றன .  PLUS TWO  மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்ட 10 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் . மாணவ , மாணவிகளுக்கு தனித்தனியே இலவச விடுதி வசதி உள்ளது . கூடுதல் விவரங்களுக்கு ,

 ' இயக்குநர் ,

 உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் ,

 2 ஆம் முதன்மைச் சாலை , 

மய்ய தொழில்நுட்ப பயிலக வளாகம் , 

தரமணி , 

சென்னை 600113' 

என்ற முகவரியை அணுகலாம் . 044-22542992 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் . இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது .


Post a Comment

0 Comments