இரத்த வெள்ளையணுக்களை(White Blood Cell) அதிகரிக்க- எந்தெந்த உணவுகளை சாப்பிடலாம் .!!
இரத்த வெள்ளையணுக்கள்(WBC):
ஆரோக்கியமாக வாழ வெள்ளையணுக்கள் (WBC)முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த வெள்ளையணுக்கள்(WBC) எலும்பு மஜ்ஜையில் உற்பத்தி செய்யப்படுகிறது. நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு ஆதரவளித்து, பாக்டீரியாக்கள் மற்றும் இதர நோய்த்தொற்றுக்களை எதிர்த்துப் போராடுவது தான் இரத்த வெள்ளையணுக்களின் (WBC)முக்கிய பணி.
இரத்த வெள்ளையணுக்கள் அளவு:
ஒருவரது உடலில் இரத்த வெள்ளையணு(WBC)க்களானது ஒரு மைக்ரோலிட்டர் இரத்தத்தில் சராசரியாக 4,500 முதல் 10,000 வரை இருக்கும். எப்போது இந்த அளவுக்கு குறைவாக இரத்த வெள்ளையணுக்கள்(WBC) உள்ளதோ, அப்போது உடல்நல குறைவால் அடிக்கடி பாதிக்கப்படக்கூடும். ஒருவர் அடிக்கடி நோய்வாய்ப்பட நேர்ந்தால், உடலின் இரத்த வெள்ளையணுக்களின்(WBC) அளவை பரிசோதித்து பார்ப்பது நலம். இரத்த வெள்ளையணுக்களை அதிகரிக்க எந்தெந்த உணவுகளை சாப்பிடலாம் என்று பார்ப்போம்.
இரத்த வெள்ளையணுக்களை (WBC)அதிகரிக்க எந்தெந்த உணவுகளை சாப்பிடலாம்:
சிட்ரஸ் பழ வகையைச் சேர்ந்த ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி, கிரேப்ஃபுரூட் போன்றவற்றை அடிக்கடி சாப்பிடுங்கள். இதனால் இரத்த வெள்ளையணுக்களின் (WBC) அளவு அதிகரிக்கும்.
பசலைக்கீரையில் வைட்டமின் சி(Vit C) அதிகம் இருப்பதுடன், ஏராளமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பீட்டா-கரோட்டீன்களும் அடங்கியுள்ளது. இது கிருமிகளை எதிர்த்துப் போராடும் இரத்த வெள்ளையணுக்களின்(WBC) அளவை அதிகரிக்கும்.
பாதாமை ஒருவர் தினமும் ஒரு கையளவு சாப்பிட்டு வந்தால், இரத்த வெள்ளையணுக்களின்(WBC) அளவு அதிகரித்து, உடலைத் தாக்கும் நோய்களின் தாக்கம் குறையும். க்ரீன் டீயில் உள்ள அமினோ அமிலம் (Amino Acid) எல்-தியனைன், கிருமிகளை எதிர்த்துப் போராடும் வெள்ளையணுக்களின்(WBC) உற்பத்திக்கு உதவும்.
பப்பாளி(Papaya)யில் பொட்டாசியம்(Potassium), பி வைட்டமின்கள்(Vit C), ஃபோலேட் போன்ற ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் தேவையான சத்துக்களும் உள்ளது. பப்பாளியைப் போன்றே கிவி பழத்தில் ஏராளமான அளவில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களான ஃபோலேட், பொட்டாசியம், வைட்டமின் கே (Vit K & C) மற்றும் வைட்டமின் சி போன்றவைகள் உள்ளது. இந்த வைட்டமின் சி கிருமிகளை எதிர்த்துப் போராடும் இரத்த வெள்ளையணுக்களின் அளவை மேம்படுத்துவதோடு, உடலின் முறையான செயல்பாட்டிற்கும் உதவும்.
0 Comments