Join Our Whats app Group Click Below Image

Quarantine Diet : தனிமைபடுத்தப்பட்டோர் தவிர்க்க வேண்டிய உணவுகள் -என்னென்ன.??

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

 Quarantine Diet : தனிமைபடுத்தப்பட்டோர் தவிர்க்க வேண்டிய உணவுகள் -என்னென்ன.??

சரிவிதிக உணவு (Balanced Diet)

உடலுக்கு ஊட்டச்சத்தை வழங்குவது, நாம் உட்கொள்ளும் சரிவிதிக உணவு (Balanced Diet)தான். இதன்மூலம் கிடைக்கும் ஊட்டச்சத்துதான் நமக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நோய்களை எதிர்த்து போராட உதவுகிறது.

 எனவே கொரோனா(Corona) பாதித்து வீட்டு தனிமையில் இருப்பவர்களும், கொரோனா அறிகுறிகளால் தனிமைபடுத்திக் கொண்டோரும், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் சரிவிகித உணவு( Balanced Diet)களை எடுத்துக் கொண்டால் கொரோனாவை வென்றுவிடலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.

இந்த செய்தியையும் படிங்க...

அதிகரிக்கும் கருப்பு பூஞ்சை(Black Fungi) பாதிப்பு; மாநிலங்களுக்கு (State) மத்திய அரசு (Central Government)கடிதம்..!! 

கார்போஹைட்ரேட் (carbohydrate):

வீட்டுத் தனிமையில் இருப்பவர்கள் கார்போஹைட்ரேட் (carbohydrate)நிறைந்த உணவுகளான முழு தானியங்கள், காய்கறிகள், பால் பொருட்கள் மற்றும் பருப்பு வகைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். 

கார்போஹைட்ரேட்(Carbohydrate) உணவுகளை எடுத்துக் கொள்வதால் உடல் குண்டாகிவிடும் என நினைத்து, பலரும் அத்தகைய உணவுகளை தவிர்ப்பது தவறு எனக் கூறும் மருத்துவர்கள், முழு தானியங்களையும், சிறுதானியங்களையும் சாப்பிட வேண்டும் என தெரிவிக்கின்றனர். இவற்றில் ஆண்டி ஆக்சிடண்ட்ஸ் (Anti-Oxicidence) அதிக அளவில் இருப்பதால், கொரோனாவை(Corona) எதிர்த்துப் போராட உதவும் என்றும் தெரிவிக்கின்றனர்.

 புரோட்டீன் (Protein):

நுரையீரல் திசுக்களின் கட்டமைப்பை வலுப்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக பராமரிக்கவும் தேவையானது புரோட்டீன் (Protein). இதற்கு முழு பருப்பு வகைகளை அதிகளவில் சாப்பிட வேண்டும். அத்துடன் நாள்தோறும் முட்டைகளையும், அடிக்கடி கோழிக்கறி, ஆட்டிறைச்சி போன்றவற்றையும் சாப்பிடலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.

கொழுப்பு சத்து(Fats):

உடல் ஆரோக்கியத்திற்கு கொழுப்பு சத்தும் மிக அவசியமானது. எனவே, தேவையான எண்ணெய்யை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் எனக் கூறும் மருத்துவர்கள், நெய்யை சற்று கூடுதலாக எடுத்துக் கொள்ளலாம் என்கின்றனர். அத்துடன் பால் பொருட்களையும் சாப்பிடலாம் எனக் கூறுகின்றனர்.

விட்டமின்கள், மினரல்ஸ்(Vitamins, Minerals):

உடலுக்கு தேவையான விட்டமின்கள், மினரல்ஸ்(Vitamins, Minerals)  கிடைக்க, சிட்ரிக் ஆசிட் அடங்கியுள்ள எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி ஆகியவற்றையும், பப்பாளி Papaya, தக்காளிTomato, கிவி, மாம்பழம்Mango ஆகியவற்றையும் எடுத்துக் கொள்ள வேண்டும். 

இந்த செய்தியையும் படிங்க...

CORONA -19: மூன்றாம் அலை- குழந்தையை காக்கும் முன் எச்சரிக்கை முறைகள் என்னென்ன..?? 

அத்துடன் பாதாம், முந்திரி, வால்நட், உலர்ந்த பூசணி விதைகளையும் சாப்பிட வேண்டும் எனக் கூறும் மருத்துவர்கள், கட்டாயமாக பேக் செய்யப்பட்ட உணவுகள், ready to cook உணவுகளை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்துகின்றனர்.

Post a Comment

0 Comments