பிஎச்.டி.,(Ph.D.,) சேர்க்கைக்கு -நுழைவு தேர்வு அறிவிப்பு..!!
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலையில், 2021 - 22ம் கல்வி ஆண்டிற்கான பிஎச்.டி., ஆராய்ச்சி படிப்புக்கு மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம், 110 இடங்களுக்கு மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.தகுதியான விண்ணப்பதாரர்கள் சட்ட பல்கலையின், https://tndalu.ac.in/ என்ற இணையதளத்தில், விண்ணப்ப படிவம் மற்றும் தகவல் கையேட்டை பதிவிறக்கம் செய்யலாம்.
இந்த செய்தியையும் படிங்க...
தபால்துறை தேர்வுகள்-ஒத்திவைப்பு..!!
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், 750ம் ரூபாயும்; மற்றவர்கள், 1,250 ரூபாயும் செயல்முறை கட்டணம் செலுத்த வேண்டும். வரும் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அடிப்படை கல்வி தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு, ஜூன், 19ல் ஆன்லைன் வழி நுழைவு தேர்வு நடத்தப்படும். அதில் பெறும் மதிப்பெண் அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என, பல்கலை பொறுப்பு பதிவாளர் பாலாஜி அறிவித்துள்ளார்.
0 Comments