Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..
பி.எப்.,(PF) திட்டம் மூலம் கிடைக்கும் அறியப்படாத பலன்கள்..!!
தொழிலாளர் சேமநல நிதியான பி.எப்.,(PF) திட்டம், வருங்கால பாதுகாப்பிற்கான சேமிப்பாக கருதப்படுகிறது. நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் மாதாந்திர பங்களிப்புக்கான வரம்பை கொண்டிருந்தால், பி.எப்.,(PF)திட்டத்தில் உறுப்பினராக சேர்வது கட்டாயமாகும்.இத்திட்டத்தின் மூலம் செலுத்தப்படும் பங்களிப்புக்கு, வருமான வரி விலக்கு உண்டு என்பது பரவலாக அறியப்பட்டது. எனினும், வருமான வரி பலன் தவிர, பி.எப்.,(PF) (PF)திட்டம் அதன் நிறுவனர்களுக்கு காப்பீடு உள்ளிட்ட வேறு பல முக்கிய பலன்களையும் அளிக்கிறது.
இந்த செய்தியையும் படிங்க...
அரசு ஊழியர்களின் ஈட்டிய விடுப்பு ஊதியம் -ஓராண்டுக்கு நிறுத்தம்..!!
இலவச காப்பீடு: பி.எப்., (PF)அமைப்பு இ.பி.எப்., (PF)திட்டம், 'பென்ஷன்' திட்டம் மற்றும் காப்பீடு என மூன்று திட்டங்களை வழங்குகிறது. பி.எப்.,(PF)உறுப்பினர் ஒவ்வொருவரும் இலவச காப்பீடு பாதுகாப்பு பெறலாம். பணியில் இருக்கும் காலத்தில் மரணம் அடைந்தால், காப்பீடு தொகையாக 7 லட்சம் ரூபாய் வரை பெறலாம்.பென்ஷன் திட்டம்:உறுப்பினர்கள் 58 வயதுக்கு பின், பென்ஷன் பெறும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால், இதற்கு தகுதி பெற, 15 ஆண்டுகள் தொடர்ந்து சேவையில் இருந்திருக்க வேண்டும். நிறுவன பங்களிப்பில், 8.33 சதவீத தொகை பென்ஷன் கணக்கில் சேர்க்கப்படுகிறது. இதன் மூலம் பின்னர் பென்ஷன் பெறலாம்.கடன் வசதி: நிதி நெருக்கடி ஏற்பட்டால், உறுப்பினர்கள் தங்கள் பங்களிப்பு தொகை மீது கடன் பெறும் வசதி இருக்கிறது.
இதற்கான வட்டி விகிதம், 1 சதவீதம் தான். இந்த கடன் குறுகிய கால அளவிலானது. கடனாக பெற்றுக்கொண்ட தொகையை, 36 மாதங்களுக்குள் உறுப்பினர்கள் திரும்பிச் செலுத்த வேண்டும்.பகுதி விலக்கல்: பி.எப்., (PF)ஓய்வு காலத்திற்கான சேமிப்பாக கருதப்படுவதால், இதன் தொகையை இடையே விலக்கிக் கொள்ள முடியாது. எனினும் குறிப்பிட்ட சூழ்நிலைகளில் பகுதி விலக்கல் சாத்தியம்.
இந்த செய்தியையும் படிங்க...
பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் பதவியிடம்- ஆணையர் பணியிடமாக மாற்றம்..!!
மருத்துவ அவசர நிலைகளின் போது, நிபந்தனைகளுக்கு ஏற்ப பகுதி அளவு தொகையை விலக்கிக் கொள்ள அனுமதி உண்டு.வீட்டுக்கடன்: உறுப்பினர்கள் வீட்டுக்கடனை அடைக்கவும் இந்த தொகையை பயன்படுத்திக் கொள்ளலாம். புதிய வீடு வாங்க அல்லது வீடு கட்ட, 90 சதவீதம் வரை பங்களிப்பை விலக்கிக் கொள்ளலாம். நிலம் வாங்கவும் இந்த வசதியை பயன்படுத்தலாம். எனினும், பி.எப்.,(PF) தொகையை விலக்கிக் கொள்வதை கடைசி வாய்ப்பாகவே பயன்படுத்த வேண்டும்.
0 Comments