கோவிட் நிதிகளும், விதிகளும்- FCRA தற்காலிக அனுமதி வழங்க வேண்டும்..!!
வரி விலக்கு இந்தியாவில் இயங்கிவரும் டிரஸ்ட்கள் உள்நாட்டில் சேவைப் பணிகளில் ஈடுபடுவதற்கு உள்நாட்டில் இருந்து நிதி திரட்ட தடைஏதுமில்லை. இத்தகைய டிரஸ்ட்கள் '12 A' மற்றும்'80 G' ஆகிய இரண்டுபிரிவுகளின் கீழ்வருமான வரித்துறையிடம் அங்கீகாரம் பெறும் வாய்ப்பும் உண்டு.அப்படி சம்பந்தப்பட்ட சேவை அமைப்புகள் '12 A' பிரிவில் அங்கீகாரம் பெற்றிருந்தால் அந்த அமைப்புகள் வருமான வரி செலுத்த தேவை இல்லை.
இந்த செய்தியையும் படிங்க...
காலையிலே இந்த பாலை குடிச்சா -கால் வலி வராது..!!
இந்த அனுமதி வழங்கும் அதிகாரம் மத்திய நிதி அமைச்சகத்திற்கும் உள்துறை அமைச்சகத்திற்கும் சேர்ந்து உள்ளது.வெளிநாட்டிலிருந்து பெறும் பணபரிவர்த்தனைகள் தீவிரவாதத்திற்கும் மதவாதத்திற்கும் உட்படுத்தப் படுவதைத் தடுப்பதற்காகஉள்துறை அமைச்சகமும் இதைத் தீவிரமாகக் கண்காணிக்கிறது.
கடந்த ஆண்டில் FCRA வில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளும் கொண்டு வரப்பட்டன.தேசத்தின் பாதுகாப்பையும்ஒற்றுமையையும் நிலை நிறுத்தும் வகையில் இருப்பதால் இது தேவையான ஒன்று.ஒரு நிறுவனம் வழங்கும் கோவிட் உதவிகள் CSR எனப்படும்'கார்ப்பரேட் சோஷியல் ரெஸ்பான்சிபிலிட்டி'யின் கீழ் வருகிறது என்ற மத்திய அரசின் சமீபத்திய அறிவிப்பு வரவேற்கத்தக்கது.
அதேபோல நாடு முழுதும் அந்தந்த மாநிலங்கள் மாவட்டங்களில் இயங்கிவரும் ரோட்டரி போன்ற பல தன்னார்வ டிரஸ்ட் அமைப்புகள் கோவிட் நிவாரணத்திற்கு பெருமளவில் உதவி வருகின்றன.வெளிநாடுகளில் வசிக்கும் தங்களுக்கு தெரிந்த உறவினர், நண்பர்கள், நிறுவனங்கள் வாயிலாக நிதி திரட்டுவதற்கு முயன்று வருகின்றனர்.
அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் தங்கள் தாய் மண்ணுக்கு உள்ளூர் மக்களுக்கு தாங்களாகவும் தங்களது நண்பர்கள் மூலமும் உதவ தயாராக இருக்கின்றனர் FCRA பதிவு இல்லாததால்இந்தியாவில் இயங்கும் டிரஸ்ட்கள் / ரோட்டரி போன்ற தன்னார்வ சேவை அமைப்புகள் டிரஸ்ட்கள் வெளிநாட்டு நிதி பெறுவதற்கு தடையாக உள்ளது.
இந்த செய்தியையும் படிங்க....
ஆஸ்துமா பிரச்சனைகளுக்கு இயற்கை வைத்திய முறை.! உணவுக் கட்டுப்பாடு.!
0 Comments