Join Our Whats app Group Click Below Image

'பாஸ்டேக் FASTAG' அட்டை- ஏமாற வேண்டாம் : ஆணையம் எச்சரிக்கை..!!

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

 'பாஸ்டேக் FASTAG' அட்டை- ஏமாற வேண்டாம் : ஆணையம் எச்சரிக்கை..!!

' ONLINE நிறுவனங்களிடம் ஏமாற வேண்டாம்':

' ONLINE நிறுவனங்களிடம், ' FASTAG' மின்னணு  ELECTRONIC  CARD வாங்கி ஏமாற வேண்டாம்' என, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) எச்சரித்துள்ளது. சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்த, வாகனங்கள் காத்திருப்பதை தவிர்க்க, ரொக்க கட்டணத்திற்கு பதிலாக, மின்னணு ELECTRONIC முறையில் கட்டணம் வசூலிக்கும், 'FASTAG' திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 

இந்த செய்தியையும் படிங்க...

ஏர் இந்தியா நிறுவனத்தில் வேலை..!!  

'பாஸ்டேக்'FASTAG திட்டம் :

FASTAG ELECTRONIC CARDS, தேசிய நெடுஞ்சாலை ஆணையம், www.ihmcl.co.in என்ற, internet வாயிலாகவும், 'my Fastag' mobile App வாயிலாகவும் வழங்கி வருகிறது. பல்வேறு வங்கிகள், தொலைதொடர்பு நிறுவனங்கள், பண வங்கிகள் வாயிலாகவும், FASTAG CARDS வழங்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.இதற்கென கார் உள்ளிட்ட, இலகு ரக வாகனங்களுக்கு குறைந்தபட்சம், Rs 500 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

 பாஸ்டேக் மின்னணு அட்டையை(FASTAG ELECTRONIC CARD), வாகனத்தின் முன்பக்க கண்ணாடியில் ஒட்டிக்கொண்டால், சுங்கச்சாவடிகளை கடக்கும் போது, அங்குள்ள கருவி வாயிலாக, சுங்க கட்டணம், வங்கி கணக்கில் இருந்து கழித்துக் கொள்ளப்படும். இது தொடர்பான MESSAGE, பதிவு செய்யப்பட்ட MOBILE PHONE எண்ணுக்கு வந்து சேரும்.

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI)எச்சரித்துள்ளது:

 இந்நிலையில், 'ONLINE' வாயிலாக, FASTAG CARDS வழங்கப்படுவதாக, அதிகளவில் விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. இதை நம்பி பலரும், ஆன்லைனில் ONLINE பாஸ்டேக் FASTAG வாங்க, பணம் கட்டி ஏமாந்து வருகின்றனர்.இதுதொடர்பாக, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு (NHAI) புகார்கள் வருகின்றன. இதையடுத்து, 'ஆன்லைன் வாயிலாக, யாரும் பணம் கட்டி ஏமாற வேண்டாம்' என, தேசிய நெடுஞ்சாலை ஆணையம்(NHAI) எச்சரித்துள்ளது.

இந்த செய்தியையும் படிங்க...

 வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பிக்க தவறியவர்களுக்கு-தமிழக அரசு அறிவிப்பு..!! 

 இதுபோன்ற முறைகேடுகள் தொடர்பான விபரங்களை, ஆணையத்தின், '1033' என்ற, அவசர கட்டுப்பாட்டு அறைக்கும், etc.nodal@ihmcl.com. என்ற, மின்னஞ்சல் முகவரியிலும் (E-mail Address) தெரிவிக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Post a Comment

0 Comments