Join Our Whats app Group Click Below Image

BREAKING:- தமிழகத்தில் தளர்வுகள் அற்றமே வரை 1 வார மே 24-ஆம் தேதி முதல் மே 31 வரை- முழு ஊரடங்கு !!

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

 BREAKING:- தமிழகத்தில் தளர்வுகள் அற்ற 1 வார மே 24-ஆம் தேதி முதல் மே 31 வரைமுழு ஊரடங்கு !!

தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது. தினசரி கிட்டத்தட்ட 36 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்படுவது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மே 10ஆம் தேதிமுதல் 24ஆம் தேதிவரை இரண்டு வாரகாலத்திற்கு முழு ஊரடங்கு அறிவித்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.பின்னர் சிலர் ஊரடங்கை மீறி செயல்பட்டு வருவதாக கூறி கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டன. 

 இந்த செய்தியையும் படிங்க...

CORONA -19: மூன்றாம் அலை- குழந்தையை காக்கும் முன் எச்சரிக்கை முறைகள் என்னென்ன..?? 

முழு ஊரடங்கு அமலுக்கு வந்தபோதும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே வருவதால் இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கை நீட்டிப்பது மட்டுமே ஒரே வழி என மருத்துவர்கள் தரப்பில் ஏற்கனவே கூறப்பட்டது. முழுமுடக்கத்தை நீட்டிக்கலாமா அல்லது தொடர்ந்து அமல்படுத்தலாமா என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டமன்ற அனைத்துக்கட்சி குழு கூட்டம் இன்று காலை தொடங்கியது.

இந்நிலையில் தமிழகத்தில் மே 24-ஆம் தேதி முதல் மே 31 வரை எந்த வித தளர்வுகளும் இன்றி ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு செய்து முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

  1. முழு ஊரடங்கு காலத்தில் மருந்தகங்கள், நாட்டு மருந்து கடைகள் இயங்க அனுமதி
  2. பால் விநியோகம், குடிநீர் விநியோகம், தினசரி பத்திரிகை விநியோகத்திற்கு அனுமதி
  3. பொதுமக்கள் நலன் கருதி இன்று இரவு 9 மணி வரை கடைகள் திறந்திருக்கும் தமிழக அரசு அனுமதி
  4. நாளைக்கு ஒரு நாள் மட்டும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்து கடைகளும் திறக்க அனுமதி
  5. வெளியூர் செல்லும் பயணிகளின் நலன் கருதி இன்றும் நாளையும் தனியார், அரசு பேருந்துகள் செல்ல அனுமதி
  6. தனியார் நிறுவனங்கள், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் போன்றவற்றில் பணிபுரிவோர்,வீட்டிலிருந்தே பணிபுரிய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
  7. Swiggy, Zomato போன்ற நிறுவனங்கள் பார்சல் சேவையில் ஈடபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  8. உணவகங்களில் காலை 6.00 மணி முதல் 10.00 மணி வரையிலும், நண்பகல் 12.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரையிலும், மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதி
  9. பெட்ரோல், டீசல் பங்க்குகள் வழக்கம் போல் இயங்கும்
  10. சரக்கு வாகனங்கள் செல்லவும், அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல அனுமதி
  11. உரிய மருத்துவக் காரணங்கள் மற்றும் இறப்புகளுக்காக மட்டும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பதிவுடன் அனுமதிக்கப்படும்
  12. மருத்துவக் காரணங்களுக்காக மாவட்டத்திற்குள் பயணிக்க இ-பதிவு தேவையில்லை
  13. செய்தி மற்றும் ஊடக நிறுவனங்கள் வழக்கம் போல் இயங்கலாம்.

Post a Comment

0 Comments